என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
- சாலையோரம் வைக்கப்பட்டிருந்த “மதுபான பார்” ஒன்றின் இரும்பு பதாகையை அவர்கள் அப்புறப்படுத்தியதாக தெரிகிறது.
- ஆத்திரம் அடைந்த பார் உரிமையாளர் உட்பட 2 பேர் வெற்றிவேலிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர்.
சென்னை :
துரைப்பாக்கம், பார்த்தசாரதி நகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல். ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டரான இவர் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இன்று காலை வளசரவாக்கம் ஆற்காடு சாலையில் நடைபெற்று வரும் மெட்ரோ ரெயில் பணிக்காக அங்குள்ள குண்டும் குழியுமாக கிடந்த சாலையை ஜே.சி.பி எந்திரம் மூலம் சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.
அப்போது சாலையோரம் வைக்கப்பட்டிருந்த "மதுபான பார்" ஒன்றின் இரும்பு பதாகையை அவர்கள் அப்புறப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பார் உரிமையாளர் உட்பட 2 பேர் வெற்றிவேலிடம் தகராறில் ஈடுபட்டு தாக்கினர். இதுகுறித்து வெற்றிவேல் வளசரவாக்கம் போலீசில் புகார் அளித்தார். போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






