என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வேடசந்தூரில் அரசு பஸ் மீது பைக் மோதி 2 பேர் பலி- மற்றொரு விபத்தில் பால் வியாபாரி மரணம்
- கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது பைக் மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர்.
- விபத்து குறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் ஆர்.எம்.காலனியை சேர்ந்தவர் ராஜேஸ்(28). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். தற்போது திண்டுக்கல் திரும்பினார். இவரது நண்பர் செட்டிநாயக்கன்பட்டி கள்ளிப்பட்டியை சேர்ந்தவர் பாலசந்தர்(41). இவர் தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலைபார்த்து வந்தார். 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வேடசந்தூரில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
வேடசந்தூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் டீசல் நிரப்பிக்கொண்டு அரசு பஸ் வெளியே வந்தது. அப்போது பைக்கில் வந்தவர்கள் அதனை கவனிக்காமல் சென்றதால் கண்ணிமைக்கும் நேரத்தில் அரசு பஸ் மீது பைக் மோதியது. இதில் 2 பேரும் தூக்கிவீசப்பட்டனர்.
ராஜேஸ் சம்பவ இடத்திலேயே பலியானார். படுகாயங்களுடன் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பாலசந்தரை அக்கம்பக்கத்தினர் மீட்டு வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் சிறிதுநேரத்திலேயே பாலசந்தரும் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து வேடசந்தூர் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் வழக்குபதிவு செய்து பஸ் டிரைவர் மகுடீஸ்வரனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிகாலை நேரத்தில் நடைபெற்ற இந்த விபத்தால் அப்பகுதியில் சோகம் நிலவியது.
திண்டுக்கல் அருகே கொசவபட்டி உத்திரிய மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அருளானந்த்(48). பால்வியாபாரி. இவர் கொசவபட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த பைக் மோதியதில் படுகாயமடைந்தார்.
அக்கம்பக்கத்தினர் மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாணார்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.