என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சாத்தான்குளம் பகுதிகளில் மீனவர்கள் வேலை நிறுத்தம்
- படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
- தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
சாத்தான்குளம்:
தமிழகத்தின் தென் மாவட்ட மீனவர்கள் கடற்கரை பகுதியில் இருந்து 12 நாட்டிக்கல் தூரம் வரையிலான பகுதிக்கு உள்ளேயே சென்று மீன் பிடித்து வருகின்றனர். இந்த நிலையில் கேரள விசைப்படகு மீனவர்கள் அத்துமீறி தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க கூடிய 12 நாட்டிக்கல் தூரத்தின் அருகே விசைப்படகில் வந்து தினமும் மீன் பிடித்து செல்வதாக கூறப்படுகிறது.
இதனால் தமிழக மீனவர்கள் கடல் தொழிலுக்கு செல்லும்போது அவர்களுக்கு மீன்கள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதனை கண்டித்து தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பெரியதாழை, மணப்பாடு, ஆலந்தலை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த நாட்டுப் படகு மீனவர்கள் இன்று முதல் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் படகுகள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இப்போராட்டத்தில் 400-க்கும் மேற்பட்ட நாட்டுப் படகு மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் சுமார் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் மீன் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதே கோரிக்கையை வலியுறுத்தி நேற்று தூத்துக்குடியில் விசைப்படகு மீனவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.