என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
எம்.எல்.ஏ.க்களுக்கு ஐ.பி.எல். பாஸ் வழங்க வேண்டும்- எஸ்.பி.வேலுமணி கோரிக்கை
- சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும்.
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஐ.பி.எல் போட்டிகளைப் பார்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் கொடுக்கப்பட்டது.
சென்னை:
தமிழக சட்டசபையில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை, சிறப்புத்திட்ட செயலாக்கத்துறை மானிய கோரிக்கை மீது இன்று விவாதம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அ.தி.மு.க. கொறடா எஸ்.பி.வேலுமணி கோரிக்கை ஒன்றை விடுத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளை காண அதிமுக எம்.எல்.ஏ.க்களுக்கு பாஸ் வழங்க வேண்டும். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஐ.பி.எல் போட்டிகளைப் பார்க்க எம்.எல்.ஏ.க்களுக்கு 400 பாஸ் கொடுக்கப்பட்டது என கூறினார்.
இதனிடையே சபையில் பேசிய தருமபுரி பா.ம.க. சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரன், தமிழ்நாட்டில் திறமையான வீரர்கள் பலர் இருந்தும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஒருவரை கூட தேர்வு செய்யவில்லை. ஆனால் தமிழ்நாட்டின் அணி போல விளம்பரம் செய்து வர்த்தக லாபம் அடைகிறது. தமிழ்நாட்டு வீரர்களே இல்லாத அந்த அணியை அரசு தடை செய்யவேண்டும் என மக்கள் விரும்புவதாக கூறினார்.