என் மலர்
உள்ளூர் செய்திகள்

கொட்டக்குடி ஆற்றில் மாங்காய் லோடுடன் அடித்து செல்லப்பட்ட டிராக்டர்.
வெள்ளப்பெருக்கால் கொட்டக்குடி ஆற்றில் மாங்காய் லோடுடன் அடித்து செல்லப்பட்ட டிராக்டர்
- தொடர் வெள்ளப்பெருக்கால் கொட்டக்குடி ஆற்றுக்கு செல்ல, ஆற்றை கடக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது.
- பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
மேலசொக்கநாதபுரம்:
மேற்குதொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் கனமழையால் கொட்டக்குடி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைப்பிள்ளையார் நீர்வீழ்ச்சியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இந்த நிலையில் மழை அதிகரித்ததால் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு இருகரைகளையும் தொட்டவாறு தண்ணீர் சென்றது. தேனி மாவட்டம் போடியை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கு மேலப்பரவு பகுதியில் தோட்டம் உள்ளது. அங்கிருந்து மாங்காய் லோடு ஏற்றிக்கொண்டு கொட்டக்குடி ஆற்றை கடக்க முயற்சித்துள்ளார்.
அப்போது திடீரென டிராக்டர் தண்ணீரில் சிக்கி கொண்டது. தண்ணீர் வரத்து மேலும் அதிகரித்ததால் டிராக்டர் செல்ல முடியாமல் ஆற்றிலேயே அடித்து செல்லப்பட்டது. இதை பார்த்ததும் டிராக்டர் டிரைவர் சுதாரித்துக்கொண்டு குதித்ததால் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். சுமார் ரூ.1லட்சம் மதிப்புள்ள மாங்காய் லோடு மற்றும் புதிய டிராக்டர் அடித்து செல்லப்பட்டதால் இளையராஜா வேதனைஅடைந்தார்.
தொடர் வெள்ளப்பெருக்கால் கொட்டக்குடி ஆற்றுக்கு செல்ல, ஆற்றை கடக்க தடைவிதிக்கப்பட்டிருந்தது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.






