search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மணப்பெண் கையில் கியூஆர் கோடுடன் மெஹந்தி: மொய் வசூலில் டிஜிட்டல் படுத்தும் பாடு
    X

    மணப்பெண் கையில் 'கியூஆர்' கோடுடன் மெஹந்தி: மொய் வசூலில் டிஜிட்டல் படுத்தும் பாடு

    • சமீபகாலமாக திருமண அழைப்பிதழில் கியூஆர் கோடு போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது.
    • பொதுவாக திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மெஹந்தி போடப்படும்.

    இந்தியா டிஜிட்டல் மயமாகி வருகிறது என்று பெருமையோடு சொல்கிறோம். இதில் எல்லோரும் அவரவர் பங்குக்கு ஏதாவது ஒரு வகையில் ஒத்துழைப்பது தப்பில்லை.

    ரோட்டோரத்தில் செருப்பு தைக்கும் தொழிலாளி வரை டிஜிட்டல் மயத்துக்கு மாறி விட்டது என்னவோ ஆச்சரியம்தான். இதை விழிப்புணர்வு என்று எடுத்துக்கொண்டாலும் சரி. புதுமையின் மீதான ஈர்ப்பு என்றாலும் சரி.

    அதே நேரம் சதாசர்வ காலமும் ஒவ்வொருவரும் நாமும் டிஜிட்டலில் புதுமை செய்ய வேண்டும் என்று நினைக்கிறார்கள். இப்படி யோசித்து யோசித்து ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு புதுமையை செய்து கொண்டே வருகிறார்கள்.

    சமீபகாலமாக திருமண அழைப்பிதழில் கியூஆர் கோடு போடும் பழக்கம் அதிகரித்து வருகிறது. அதாவது திருமணத்திற்கு வர முடியாதவர்களும் அந்த அழைப்பிதழில் கியூஆர் கோடை ஸ்கேன் செய்து மொய்யை அனுப்பி விடுவதற்கு அப்படி ஒரு புதிய வசதியை கொண்டு வந்தது ஆச்சரியமாக பார்க்கப்பட்டது.

    இந்த நிலையில் அதையும் தாண்டி விட்டார்கள் ஒரு புதுமண தம்பதி. பொதுவாக திருமணத்தில் மணப்பெண்ணுக்கு மெஹந்தி போடப்படும். அப்படி மெஹந்தி போட்டதில் அந்தப் பெண்ணின் கையில் கியூஆர் கோர்டு வடிவை பதிவு செய்திருக்கிறார்கள். வாழ்த்துச் சொல்ல போகும்போது மணப்பெண் கையை குலுக்கி கவரில் இருக்கும் பணத்தையும் கையில் கொடுப்பதுதான் வழக்கம். ஆனால் கை குலுக்கி விட்டு கையில் இருக்கும் கியூ.ஆர்.கோடை ஸ்கேன் செய்து மொய்யை செலுத்தி விடலாமே என்ற புதுமையான ஐடியாவை வெளியிட்டுள்ளார்கள். அந்த பெண்ணின் கையில் வரையப்பட்டிருந்த கியூஆர் கோட்டை ஸ்கேன் செய்து பலர் மொய்யை அனுப்பியது பலரையும் வியக்க வைத்தது.

    இப்படி எல்லாமா யோசிப்பாய்ங்க என்றுதான் நினைக்கத் தோன்றும். புதுமைக்கு ஒரு அளவே இல்லையா என்று சொல்லும் அளவுக்கு டிஜிட்டல் ஒவ்வொருவரையும் பாடாய்ப்படுத்துகிறது.

    Next Story
    ×