என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![அம்பை தனியார் பல் ஆஸ்பத்திரியில் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி அம்பை தனியார் பல் ஆஸ்பத்திரியில் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி](https://media.maalaimalar.com/h-upload/2023/06/20/1901358-dead.webp)
அம்பை தனியார் பல் ஆஸ்பத்திரியில் கட்டுமான பணியின்போது சுவர் இடிந்து விழுந்து தொழிலாளி பலி
![Maalaimalar Maalaimalar](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மருத்துவமனை விரிவாக்கம் தொடர்பான வேலையை முருகன் செய்து கொண்டிருந்தார்.
- சுமார் 6 அடி உயரம் கொண்ட மற்றொரு சுவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இடிந்து விழுந்தது.
சிங்கை:
நெல்லை மாவட்டம் அம்பை முடப்பாலம் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மகன் முருகன்(வயது 35). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று அம்பை அம்மையப்பர் கோவில் சன்னதி தெருவில் உள்ள தனியார் பல் ஆஸ்பத்திரியில் நடைபெற்ற கட்டுமான பணிக்காக முருகன் சென்று இருந்தார். மருத்துவமனை விரிவாக்கம் தொடர்பான வேலையை அவர் செய்து கொண்டிருந்தார்.
அப்போது அருகில் இருந்த சுமார் 6 அடி உயரம் கொண்ட மற்றொரு சுவர் சற்றும் எதிர்பாராத நேரத்தில் இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் அதன் அருகே வேலை பார்த்துக்கொண்டிருந்த முருகனின் இடுப்பு பகுதியில் சுவர் விழுந்தது. இதில் படுகாயம் அடைந்த அவரை, சக தொழிலாளர்கள் மீட்டு அம்பை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து அவர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அம்பை போலீசார் வழக்குப்பதிவு செய்து தனியார் மருத்து வமனை உரிமையாளரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.