search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் மயங்கி கிடந்த முதியவரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உதவிய போலீஸ்காரர்- அதிகாரிகள் பாராட்டு
    X

    சாலையில் மயங்கி கிடந்த முதியவரை மீட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்க உதவிய போலீஸ்காரர்- அதிகாரிகள் பாராட்டு

    • சாலையில் வந்த போது திடீரென சையது நூர் ஜமால் மாயமானார்.
    • போலீசார் மாயமான சையது நூர் ஜமாலின் புகைப்படத்தை வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பி விசாரித்து வந்தனர்.

    பெரம்பூர்:

    மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்தவர் சையது நூர்ஜமால்(56). இவர் கடந்த 14-ந்தேதி மருத்துவ சிகிச்சைக்காக குடும்பத்துடன் சென்னை வந்து இருந்தார். சென்ட்ரலில் ஆட்டோ ஏறுவதற்காக வால்டாக்ஸ் சாலையில் வந்த போது திடீரென சையது நூர் ஜமால் மாயமானார். அவரை குடும்பத்தினர் தேடிவந்தனர்.

    இதுதொடர்பாக பூக்கடை போலீசிலும் புகார் செய்யப்பட்டது. போலீசார் மாயமான சையது நூர் ஜமாலின் புகைப்படத்தை வாட்ஸ் அப் குழுக்களில் அனுப்பி விசாரித்து வந்தனர்.

    இதற்கிடையே கடந்த 15-ந்தேதி புளியந்தோப்பு பகுதியில் சாலையோரம் முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் கிடந்தார். அவரை பேசின்பாலம் தலைமைக் காவலர் சரத்குமார் மீட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தார். அவர் மயக்க நிலையில் இருந்ததால் அவரை பற்றி மேலும் விவரம் தெரியாமல் இருந்தது.

    சரத்குமார்


    இதற்கிடையே போலீசாரின் வாட்ஸ் அப் குழுவில் பகிரப்பட்ட மாயமான சையது நூர் ஜமால் புகைப்படத்தை பார்த்ததும் போலீஸ்காரர் சரத்குமார், அவர் தன்னால் புளியந்தோப்பில் சாலையோரம் மீட்கப்பட்டு ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருபவர் என்பது தெரிந்தது.

    இதுகுறித்து பூக்கடை போலீசுக்கு தகவல் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சையது நூர் ஜமாலை அவரது உறவினர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

    சரியான நேரத்தில் மாயமான சையது நூர் ஜமாலை அவரது குடும்பத்தினருடன் ஒப்படைக்க உதவிய போலீஸ்காரர் சரத்குமாரை உயர்அ திகாரிகள் பாராட்டினர்.

    Next Story
    ×