என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை மதுவில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயன்ற மனைவி
- போலீசார் விசாரணையில் சங்கீதா தனது கணவருக்கு, கள்ளக்காதலுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை கொடுத்து கொல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார்.
- சண்முகம், சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மந்தாரக்குப்பம்:
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே திருவத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடேசன்.
அவரது மனைவி சங்கீதா (வயது 34). இவர்களுக்கு 2 மகன், ஒரு மகள் உள்ளனர். லாரி டிரைவராக உள்ள வெங்கடேசன் மாதத்துக்கு 3 முறை மட்டும் வீட்டுக்கு வந்து மனைவி மற்றும் குழந்தைகளை பார்த்துவிட்டு செல்வது வழக்கம்.
எனவே சங்கீதா குள்ளஞ்சாவடி அருகே தனது தாயார் ஊரான தோப்புக்கொள்ளை கிராமத்துக்கு கூலிவேலைக்கு தினமும் பஸ்சில் சென்றுவருவார். அப்போது சங்கீதாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சண்முகம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
எனவே 2 பேரும் ஆட்டோவில் அடிக்கடி சென்று தனிமையில் பலமுறை உல்லாசம் அனுபவித்துள்ளனர். இந்த விவகாரம் சங்கீதாவின் கணவர் வெங்கடேசனுக்கு தெரியவந்தது. அவர் தனது மனைவியை கண்டித்தார்.
அதன் பின்னர் சங்கீதா ஆட்டோ டிரைவர் சண்முகத்துடன் செல்வதை நிறுத்திவிட்டார். என்றாலும் செல்போனில் அடிக்கடி பேசிவந்துள்ளனர். இந்த விசயமும் வெங்கடேசனுக்கு தெரியவந்தது. இதனால் குடும்பத்தில் பிரச்சினை வெடித்தது. இதனை அறிந்த அக்கம் பக்கம் உள்ளவர்கள் சமரசம் செய்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த சங்கீதா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கணவன் வெங்கடேசன் வீட்டில் இருக்கும் நேரத்தில் சங்கீதா தனது கள்ளக்காதலன் சண்முகத்திடம் மதுவாங்கிவர கூறியுள்ளார். அதன்படி அவர் மதுவாங்கி வந்தார்.
அப்போது சண்முகம் மறைந்திருந்தார். அந்த நேரத்தில் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து மதுவில் சங்கீதா கலந்தார். இந்த மதுவை தனது கணவர் வெங்கடேசனுக்கு கொடுத்தார். பாசத்துடன் மனைவி கொடுத்த மதுவை வெங்கடேசன் வாங்கி குடித்தார். சிறிது நேரத்தில் அவர் மயங்கி விழுந்தார்.
அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வெங்கடேசனை தூக்கிகொண்டு குறிஞ்சிப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. அதன்பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு வெங்கடேசன் நிலைமை மோசமானது. எனவே உடனடியாக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து சங்கீதா மீது உறவினர்களுக்கு சந்தேகம் எழுந்தது. இதுகுறித்து குள்ளஞ்சாவடி போலீஸ் நிலையத்தில் உறவினர் கந்தன் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிந்து சங்கீதா மற்றும் அவரது கள்ளக்காதலன் சண்முகம் ஆகியோரை போலீஸ் நிலையத்துக்கு வரவழைத்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.
விசாரணையில் சங்கீதா தனது கணவருக்கு, கள்ளக்காதலுடன் சேர்ந்து விஷம் கலந்த மதுவை கொடுத்து கொல்ல முயன்றதை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து சண்முகம், சங்கீதாவை போலீசார் கைது செய்தனர். கைதான 2 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்