search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா? 5 நிலையங்களின் நடைமேடைகள் நீளத்தை அதிகரிக்க கோரிக்கை
    X

    தென்காசி-சென்னை இடையே சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுமா? 5 நிலையங்களின் நடைமேடைகள் நீளத்தை அதிகரிக்க கோரிக்கை

    • கொரோனாவிற்கு முன்பு சில ஆண்டுகளாக வியாழக்கிழமை தோறும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.
    • சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் நெல்லைக்கு சில சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன.

    தென்காசி:

    வருகிற 12-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் அனைத்து தென்மாவட்ட ரெயில்களும் நிரம்பி வழிகிறது.

    தென்மாவட்டங்களுக்கு செல்லும் முக்கிய விரைவு ரெயில்களான கன்னியாகுமரி, முத்துநகர், திருச்செந்தூர், அனந்தபுரி, நெல்லை, பொதிகை, சிலம்பு, கொல்லம் மெயில், பாண்டியன் உள்ளிட்ட அனைத்து விரைவு ரெயில்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்து ஒவ்வொரு ரெயிலிலும் காத்திருப்பு பட்டியல் எண்ணிக்கை 300-க்கும் மேல் உள்ளது.

    இந்நிலையில், சிறப்பு ரெயில்கள் அறிவிப்பு எப்போது வரும் என பொதுமக்கள் எதிர்பார்ப்பில் இருந்த நிலையில் தெற்கு ரெயில்வே சார்பில் நெல்லைக்கு சில சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால் தென்காசிக்கு ஒரு சிறப்பு ரெயில் கூட இயக்கப்படாதது பயணிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    இதுகுறித்து பயணிகள் கூறியதாவது:-

    நெல்லையில் காலியாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நெல்லை - பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகளை கொண்டு கொரோனாவிற்கு முன்பு சில ஆண்டுகளாக வியாழக்கிழமை தோறும் நெல்லை- தாம்பரம் சிறப்பு ரெயில் இயக்கப்பட்டு வந்தது.

    தற்போது அதே காலிப்பெட்டிகளை கொண்டு தென்காசி வழியாக தீபாவளி சிறப்பு ரெயில் இயக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில் அந்த ரெயிலை நெல்லையில் இருந்து நேர்வழியில் தற்போது சிறப்பு ரெயிலாக இயக்குவது வருத்தமளிக்கிறது.

    சேரன்மகாதேவி, கல்லிடை, அம்பை, கடையம், பாவூர்சத்திரம் ரெயில் நிலையங்களின் நடைமேடைகளில் 17 பெட்டிகள் மட்டுமே நிறுத்த முடியும் என்பதால் 22 பெட்டிகள் கொண்ட பிலாஸ்பூர் ரெயில் பெட்டிகளை வைத்து தென்காசி வழியாக சிறப்பு ரெயில் இயக்க முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

    எனவே உடனடியாக இந்த 5 ரெயில் நிலையங்களில் நடைமேடைகளை நீட்டிப்பதோடு மட்டுமல்லாமல் தீபாவளி முடிந்து சென்னை செல்வதற்கு சிறப்பு ரெயில் இயக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×