என் மலர்
உள்ளூர் செய்திகள்

போடி அருகே அருவியில் செல்பி எடுக்க முயன்ற வாலிபர் தவறி விழுந்து பலி
- அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்ட வாலிபர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
- நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் சந்தீப் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து வெள்ளத்தூவன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மேலசொக்கநாதபுரம்:
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 5 பேர் கேரள மாநிலம் மூணாறை சுற்றி பார்க்க வந்தனர். சுற்றுலா தலங்களை கண்டு ரசித்த பின்னர் அவர்கள் ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர்.
எல்லக்கல் பகுதியில் உள்ள சுனைமாக்கால் அருவி பகுதியில் வாகனத்தை நிறுத்தி விட்டு இயற்கை அழகை கண்டு ரசித்தனர். இதில் சந்தீப் (வயது23) என்ற வாலிபர் அருவியின் அருகே சென்று செல்பி எடுக்க முயன்றார்.
அப்போது எதிர்பாராதவிதமாக வழுக்கி ஆற்றில் விழுந்துள்ளார். அருவியில் நீர்வரத்து அதிகமாக இருந்ததால் அடித்து செல்லப்பட்ட அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
நீண்ட நேர போராட்டத்துக்கு பின்னர் சந்தீப் உடல் மீட்கப்பட்டது. இது குறித்து வெள்ளத்தூவன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story






