search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை அமைச்சர் கீதா ஜீவன் தகவல்
    X

    தேனி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் அமைச்சர் கீதாஜீவன் ஆய்வு மேற்கொண்டார். அருகில் கலெக்டர் முரளிதரன் மற்றும் பலர் உள்ளனர்.

    ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தை உருவாக்க நடவடிக்கை அமைச்சர் கீதா ஜீவன் தகவல்

    • மகளிர் தொழில் முனைவோர்களுக்கான உற்பத்தி மற்றும் பயிற்சி மையத்தினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார்.
    • தேனி மாவட்ட விவசாயிகள், கிராமப்புற இளை ஞர்கள் இதனை பயன்ப டுத்தி வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவித்தார்.

    தேனி:

    தேனி மாவட்டம், உத்தமபாளையம் வட்டத்திற்குட்பட்ட காமாட்சிபுரம் கிராமத்தில் சென்டெக்ட் வேளாண் அறிவியல் மையத்தின் சார்பில் மகளிர் தொழில் முனைவோர்களுக்கான உற்பத்தி மற்றும் பயிற்சி மையத்தினை சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் திறந்து வைத்தார். மாவட்ட கலெக்டர் முரளிதரன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் கம்பம் ராமகிருஷ்ணன், அசோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் அமைச்சர் தெரிவித்த தாவது:-

    தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஊட்டச்சத்தை உறுதி செய் திட்டத்தின் மூலம் தமிழகத்தி ல் அனைத்து குழந்தைகளின் எடை மற்றும் உயரம் கணக்கிடப்பட்டதில் 9,50,000 குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், காதுகேளாத, வாய்பேசதா உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் 45,000 குழந்தைகளுக்கு மேல்சிகிச்சைக்காக கண்டறியப்பட்டு, உரிய சிகிச்சை அளித்திட நடவடிக்கைகள் மேற்கொ ள்ளப்பட்டுள்ளது.

    எனவே, கருவுற்ற தாய்மார்கள் கருவுருவானதி லிருந்து அந்த நாள் ஆயிரம் நாட்கள் மிகவும் முக்கியான நாட்கள், தாய், சேய்க்கு தேவையான பால், முட்டை, கீரை, பருப்பு போன்ற சத்தான உணவு பொரு ட்களை உட்கொள்ளும் போது தாயின் நலன் பாதுகாக்கப்பட்டு, குழந்தை களின் மூளை வளர்ச்சி மற்றும் ஆரோக்கியமாகவும் வளர்வதற்கு வாய்ப்பாக அமையும். இதுகுறித்து, கருவுற்ற தாய்மார்களிடம் போதிய விழிப்புணர்வுவை ஏற்படுத்திட வேண்டும்.

    6 முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மாணவிகள் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் கல்வி உதவித்தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் மாதந்தோறும் பட்டம், பட்டயம் பயிலுகின்ற மாணவியர்களுக்கு இந்த கல்வியாண்டு முதல் வழங்கப்படவுள்ளது. ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத தமிழகத்தினை உருவாக்கிடும் பொருட்டு, 1 முதல் 5-வகுப்பு வரை பயிலுகின்ற மாணவ, மாணவிகளுக்கு சத்தான உணவு அளித்திடும் பொருட்டு, முதல்-அமை ச்சரின் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது.

    சென்டெகட் வேளாண் அறிவியல் மையமானது புது டெல்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் 1994ல் இருந்து, மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களின் மூலம் விவசாயிகள் கிராமப்புற இளைஞர்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திடும் வகையில் செயல்பட்டு வருகிறது.

    விவசாயிகள் விளைவி க்கும் வேளாண் பொருட்கள் உற்பத்தி அதிகமாகும் போது அதற்க்கேற்ப விலை கிடைக்கவில்லை என்றால் சேதார இழைப்பை குறைக்கவும் மற்றும் விலை குறைவான தருணத்தில் உணவு பதப்படுத்தல் மற்றும் மதிப்புக் கூட்டல் தொழில்நு ட்பங்கள் சார்ந்த பயிற்சிகள் மற்றும் செயல் விளக்கங்கள் அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் வேளாண் அறிவியல் மையமானது 5000 விவ சாயிகளை ஒருங்கிணைத்து 5 உழவர், உற்பத்தியாளர் நிறுவனங்களை செயல்படுத்தி வருகிறது. வேளாண் சார்ந்த பல்வேறு குழுக்கள் அமைத்து, தேவையான தொழில்நு ட்பங்கள் மற்றும் பயிற்சிகள் வழங்கி வருமானத்தை இரட்டிப்பாக்கும் முனை ப்பில் செயலாற்றி வருகிறது.

    பெண்களை சிறந்த தொழில் முனைவோராக்கும் நோக்கில் வேளாண் அறிவியல் மையமானது கடந்த 5 மாதங்களில் கிராமப்புற பெண்களை 50 சுயஉதவிக் குழுக்களாக அமைத்து திராட்சையில் மதிப்புக் கூட்டல் திறன் மேம்பாட்டுபயிற்சிகள் வழங்கப்பட்டு, தொழில் முனைவோர்கள் உருவா க்கப்பட்டு தகுந்த வழிமுறை கள் மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றது.

    தேனி மாவட்ட விவசா யிகள், கிராமப்புற இளை ஞர்கள் இதனை பயன்ப டுத்தி வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என தெரிவி த்தார்.

    Next Story
    ×