என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![பெரியகுளத்தில் டாஸ்மாக் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை பெரியகுளத்தில் டாஸ்மாக் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை](https://media.maalaimalar.com/h-upload/2023/08/01/1925174-suicide-1.webp)
X
கோப்பு படம்.
பெரியகுளத்தில் டாஸ்மாக் ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை
By
மாலை மலர்1 Aug 2023 1:47 PM IST
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மதுபானம் விற்பனையில் சரியாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அவரை தேனியில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர்.
- காளியம்மன் கோவில் தெருவில் தனது மாமியார் வீட்டின் அருகில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெரியகுளம்:
பெரியகுளம் அருகில் உள்ள வடுகபட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (48). இவர் தேவதானப்பட்டி பைபாஸ் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் சேல்ஸ்மேனாக வேலை பார்த்து வந்தார்.
மதுபானம் விற்பனையில் சரியாக கணக்கு காட்டாமல் இருந்ததால் அவரை தேனியில் உள்ள டாஸ்மாக் அலுவலகத்திற்கு வருமாறு கூறியுள்ளனர். அதன்படி தேனிக்கு செல்வதாக தனது வீட்டில் கூறிச்சென்றவர் காளியம்மன் கோவில் தெருவில் தனது மாமியார் வீட்டின் அருகில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
X