search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அமெரிக்காவில் முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அளித்த `தடம் பெட்டகம்
    X

    அமெரிக்காவில் முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அளித்த `தடம்' பெட்டகம்

    • மு.க.ஸ்டாலின் முதலீட்டாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் வழங்கினார்.
    • என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது பற்றிய விவரம்.

    சென்னை:

    தொழில்முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு பரிசுப்பெட்டகம் வழங்கினார். அதில் என்னென்ன பொருட்கள் இருந்தது என்பது பற்றிய விவரம் தெரியவந்துள்ளது.

    அந்த வகையில் அமெரிக்க முதலீட்டாளர்களுக்கு முதலமைச்சர் அளித்த தடம் பரிசுப் பெட்டகத்தில், நெல்லையில் உருவாகும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வாழை நார் கூடை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் டெரகோட்டா சிற்பங்கள் (குதிரை), நீலகிரி தோடா எம்பிராய்டரி சால், பவானி ஜமுக்காளம், புலிகாடு பனை ஓலை ஸ்டாண்ட், கும்பகோணம் பித்தளை விளக்கு ஆகியவை அதில் உள்ளன.


    பவானி ஜமுக்காளம் நெசவாளர்கள் முதல் விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களின் டெரகோட்டா கைவினைக் கலைஞர்கள் மற்றும் நீலகிரியின் தோடா எம்பிராய்டரி கலைஞர்கள் வரை, சிறு சிறு சமூகங்கள் தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளத்தை இன்றும் உயிர்ப்புடன் வைத்துள்ளனர் என்பதை இந்த பரிசுப் பெட்டகம் வெளிப்படுத்துகிறது.

    தடம் திட்டத்தின் கீழ் கைவினைக் கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில், தன்னை சந்திக்கும் விருந்தினர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தடம் பெட்டகத்தை பரிசளித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×