என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பெண்கள் படத்தை ஆபாசமாக சித்தரித்த விவகாரம்:மேலும் ஒரு வாலிபர் கைது
- பெண்களின் புகைப் படத்தை சேகரித்து அதனை ஆபாச மாக சித்தரித்து தனது செல்போனில் வைத்து உள்ளார்.
- தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் அருகே உள்ள வீர சோழபுரம் கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன். இவரது மகன் வசந்த் (27). இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் பணிக்கு வரும் சுமார் 200-க்கும் மேற்பட்ட பெண்களின் புகைப் படத்தை சேகரித்து அதனை ஆபாசமாக சித்தரித்து தனது செல்போனில் வைத்து உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் தனது செல்போனை நண்பர் தினேசிடம் (27) அடமானம் வைத்துள்ளார். நேற்று தினேஷ் செல்போனை எடுத்து பார்த்த போது தனது கிராமத்தை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பெண்களின் படங்களை ஆபாசமா சித்தரித்து வைத்திருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து வார்டு உறுப்பினர் ரவியிடம் தெரிவித்துள்ளார். அவர் இது குறித்து தியாகதுருகம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனிடையே இத்தகவல் வீரசோழபுரம் கிராமத்தில் காட்டுத்தீயாய் பரவியது. உடனே திரண்டு வந்த பெண்கள் தினேசிடம் போனை பிடுங்கி அதிலிருந்த புகைப்படங்களை பார்த்து கொந்தளித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்தும் வசந்த் கிராமத்திலிருந்து தப்பிக்க முயன்றுள்ளார். உடனடியாக போலீசாார் வசந்த் இருக்கும் இடத்தை கண்டறிந்து முரார்பாளையம் அருகே அவரை கைது செய்தனர்.
ஆனால் வசந்தை தங்கள் முன்னிலையில் கொண்டு வர வேண்டும் என்று கூறி கிராம மக்கள் 300பேர் சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக சென்னை-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுப்பட்டனர். மேலும் கைது செய்த வசந்தை தங்களிடம் ஒப்படைத்தால் மட்டுமே சாலை மறியல் கைவடுவதாக தெரிவித்தனர். இதனிடையே கள்ளக் குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் தலைமையில் அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பாதிக்கப்பட்ட கிராம பெண்கள் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட னர். தொடர்ந்து மறியலில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. வசந்த் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து அவரது நண்பர் தினேஷையும் போலீசார் கைது செய்தனர். ரவியை தேடி வருகின்றனர். ரவி குடும்பத்திற்கும் தினேஷ் குடும்பத்திற்கும் தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட தகராறு தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது. இதனால் வசந்த் குடும்பத்தை பழிவாங்க ரவி இந்த விஷயத்தை வெளி கொண்டு வந்தது தெரிய வந்தது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்