என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
போராட்டத்தில் ஈடுபட்டு வந்த சாம்சங் தொழிலாளர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது
- 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
- அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அருகே சுங்குவார்சத்திரம் சிப்காட்டில் அமைந்துள்ள 'சாம்சங்' நிறுவனத்தில் தொழிலாளர்கள் 1,200 பேர் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் அமைப்பது உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 9-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் காலை சுங்குவார்சத்திரத்தில் 'சாம்சங்' நிறுவன அதிகாரிகள், தொழிலாளர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. அதனைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை தலைமைச்செயலகத்தில் இரு தரப்பினரையும் அழைத்து அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், டி.ஆர்.பி.ராஜா, சி.வி.கணேசன் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
ஆனால், நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் யாரும் பணிக்கு திரும்பவில்லை. தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த, சாம்சங் தொழிலாளர்களின் வீடுகளுக்கு நள்ளிரவில் சென்ற போலீசார், 10-க்கும் மேற்பட்டோரை கைது செய்துள்ளனர்.
மேலும் போராட்டத் திடல்களில் இருந்த பந்தல்களையும் பிரித்துள்ளனர். செல்வப்பெருந்தகை, முத்தரசன், பாலகிருஷ்ணன், வேல்முருகன் என அனைத்து கட்சித் தலைவர்களும் போராடும் தொழிலாளர்களை நேரடியாக சந்திக்க இருந்த நிலையில், காவல்துறை இந்த நகர்வை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சாம்சங் தொழிலாளர்களை நள்ளிரவில் வீடு புகுந்து போலீசார் கைது செய்ததற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்க நிர்வாகிகளை இரவில் வீடு தேடி போலீஸ் அராஜகமாக கைது செய்து வருகிறது. வன்மையான கண்டனங்கள். #Samsung #SamsungWorkers #SamsungStrike #WorkersRights #CITU @cmotamilnadu @kbcpim pic.twitter.com/YxOyuFxec1
— CPIM Tamilnadu (@tncpim) October 8, 2024