என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தேனி மாவட்டத்தில் மழைக்கால நோய்கள் பரவாமல் தடுக்க உரிய நடவடிக்கை
- தேனி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
- தினந்தோறும் தெருக்கள் மற்றும் குடியிருப்புகளில் புகை அடிக்கும் பணியினை மேற்கொள்ள கலெக்டர் அறிவுறுத்தினர்.
தேனி:
தேனி மாவட்டத்தில் தென் மேற்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் ஆலோசனைக் கூட்டம் கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
தேனி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ள பகுதிகளை கண்காணிப்பு குழு அலுவலர்கள் மற்றும் வட்ட அளவிலான கண்காணிப்பு குழு அலுவலர்கள் தொடர்ந்து கண்காணித்து, பணிகளை மேற்கொள்ளவும், வெள்ளம், மழையினால் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் உள்ள பொதுமக்களை பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்திட அந்தந்தப் பகுதிகளில் தேர்வு செய்யப்பட்டுள்ள தங்கும் இடங்களை தயார் நிலையில் வைக்திடவும் துறை சார்ந்த அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாலங்கள் மற்றும் சிறுபாலங்களில் உள்ள அடைப்புகளை அகற்றி நீர் வழிந்தோடுவதற்கு ஏதுவாக தூர்வாரப்பட்டு, ெவள்ளத்தினால் பாதிக்கக்கூடிய பகுதிகளில் தேவையான மணல் மூட்டைகள் தயார் நிலையில் உள்ளதை உறுதிசெய்திட வேண்டும். மேலும் மழைக்காலங்களில் பெறப்படும் நீரினை வீணாக்காமல் முறையாக சேமித்திடவும், உள்ளாட்சித்துறையின் மூலம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டு வரும் குடிநீரினை குளோரினேற்றம் செய்யப்பட்டு வழங்கிட வேண்டும்.
மேலும், தற்போது தென்மேற்கு பருவமழை பெய்து வருவதால் டெங்கு போன்ற காய்ச்சல் பரவுவதற்கு வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் குடிநீரினை காய்ச்சி பருகிட வேண்டும். பொதுஇடங்கள், பள்ளி, கல்லூரிகள், வணிக வளாகங்கள், அரசு அலுவலகங்கள், தெருக்கள், சாலைப்பகுதிகளில் தண்ணீர் தேங்கா வண்ணம் நடவடிக்கைகள் மேற்கொள்வதோடு, தேவையற்ற பொருட்கள் மற்றும் குப்பைகளை தினந்தோறும் அப்புறப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
மழைக்காலம் என்பதால் உள்ளாட்சி நிர்வாகத்தில் உள்ள புகை போக்கி கொண்டு தினந்தோறும் தெருக்கள் மற்றும் குடியிருப்புகளில் புகை அடிக்கும் பணியினை மேற்கொள்ள வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்