search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குழந்தைகளை  திறமையானவர்களாக உருவாக்க வேண்டும் - தேனி கலெக்டர் பேச்சு
    X

    ஆய்வு கூட்டத்தில் கலெக்டர் முரளிதரன் பேசினார்.

    குழந்தைகளை திறமையானவர்களாக உருவாக்க வேண்டும் - தேனி கலெக்டர் பேச்சு

    • தேனி கலெக்டர் அலுவலகத்தில் தாய்ப்பால் வாரவிழாவையொட்டி ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
    • குழந்தைகளை சிறந்த திறமையானவர்களாக உருவாக்க வேண்டும்

    தேனி:

    தேனி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.

    இக்கூட்டத்தில், உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் விழிப்புணர்வு பணிகள் குறித்து விரிவாக கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு தெரிவித்ததாவது:-

    உலக தாய்ப்பால் வார விழா 2022 ஆகஸ்ட் 1 முதல் 7 வரை சிறப்பாக நடத்தி வளரிளம் பெண்கள், கர்ப்பிணி தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் மற்றும் பொதுமக்களிடையே தாய்ப்பாலின் உன்னதத்தை அனைவருக்கும் உணர்த்தும் விதமாக ஆகஸ்ட் முதல் வாரம் உலக தாய்ப்பால் வாரமாக கடைபிடிக்க ப்பட்டு வருகிறது. நடப்பாண்டிற்கு உலக தாய்ப்பால் வார விழாவினை முன்னிட்டு "தாய்ப்பால் அளிப்பதை உயர்த்துவோம் கற்பிப்போம் ஆதரிப்போம்" என்ற கரு ப்பொருளை கொண்டுள்ளது.

    ஒவ்வொரு தாய் மற்றும் குழந்தையும் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத ஆரோக்கியமான உடல்நிலை அடையவும், ஊட்டசத்து மற்றும் ஆரோக்கியம் சம்பந்தமான கருத்துக்கள் ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று சேர்வதையும், சிறு குழந்தைகளுக்கான உணவு ஊட்டும் பழக்கவழக்கங்கள் குறித்தும், சிறந்த ஆரோக்கிய மானவர்களாகவும், திறமையானவர்களாகவும் உருவாக்கிடும் பொருட்டு பொதுமக்களிடையே விழிப்புணர்வுவை ஏற்படுத்திட வேண்டும்.

    எனவே, கல்லூரிகள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் வாயிலாக முகாம்கள் நடத்தப்பட்டு, கருவுற்ற மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு சத்துமாவு, சத்துணவு பெட்டகம் வழங்குதல், அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தாய்பாலின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல் மற்றும் பதாகைகள் அமைத்தல் தொடர்பான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    மாவட்டத்திலுள்ள அனைத்து கருவுற்ற தாய்மார்களுக்கும் துண்டு பிரசுரங்கள் வழங்குதல், மகளிர் சுய உதவிக்கு ழுவினரை கொண்டு நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சிப் பகுதிகளில் வசிக்கின்ற கருவுற்ற மற்றம் பாலூட்டும் தாய்மார்களின் இல்லங்களுக்கு நேரடியாக சென்று தாய்பாலின் அவசியம் குறித்து எடுத்துரைத்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்ப ட்டு வருவதை மேலும் துரிதப்படுத்தி, துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணி யாற்றிட வேண்டும் என தெரிவித்தார்.

    Next Story
    ×