search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிவன்மலை முருகன் கோவிலில் தெப்ப உற்சவ விழா
    X

    சிவன்மலை முருகன் கோவிலில் தெப்ப உற்சவ விழா

    • நந்தவன தோட்டத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
    • சிவன்மலை சுப்பிரமணியசாமி மலைக் கோவிலில் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.

    காங்கயம் :

    காங்கயம் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தைப்பூச விழாவையொட்டி பிப்ரவரி 5, 6, 7 ஆகிய தேதிகளில் தேரோட்டம் நடைபெற்றது. இந்நிலையில் சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரத்தில் உள்ள நந்தவன தோட்டத்தில் அமைந்துள்ள தெப்பக்குளத்தில் பரிவேட்டை தெப்ப உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.

    இதனையொட்டி பரிவேட்டை மண்டபத்தில் சுவாமி எழுந்தருளியும், தெப்பக்குளத்தை சுற்றி வலம் வந்தும் தெப்ப உற்சவம் நடைபெற்றது. பின்னா் அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரா் கோவிலுக்கு சுப்பிரமணியா் திரும்பினாா். வருகிற 14-ந்தேதி மாலை 3 மணிக்கு சுவாமி மலைக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 5 மணிக்கு மலைக் கோவிலில் திருவிழா கொடி இறக்குதல் மற்றும் பாலிகை நீா்த்துறை சேர்த்தலுடன் சிவன்மலை சுப்பிரமணியசாமி மலைக் கோவிலில் தைப்பூச விழா நிறைவு பெறுகிறது.

    Next Story
    ×