search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மூன்றாம் பாலினத்தவர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்: மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள்
    X

    மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் மூன்றாம் பாலினத்தவருக்கு மருத்துவ காப்பீட்டு அட்டையை வழங்கிய போது எடுத்த படம்.

    மூன்றாம் பாலினத்தவர்கள் வாழ்க்கை தரத்தை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்: மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வேண்டுகோள்

    • தமிழக அரசு எப்போதும் 3-ம் பாலினத்தவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது.
    • மூன்றாம் பாலினத்தவர்கள் வழங்கிய 55 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார்.

    கள்ளக்குறிச்சி, செப்.17-

    கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைகள் துறையின் சார்பில், 3- ம்பாலினத்தவர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அவர் பேசியதாவது:- தமிழக அரசு எப்போதும் 3-ம் பாலினத்தவர்களின் வளர்ச்சியில் அக்கறை கொண்டுள்ளது. மேலும், -ம் பாலினத்தவர்களின் கண்ணியமான வாழ்க்கையை உறுதி செய்வதற்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றது. மேலும், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மூத்த திருநங்கைகளுக்கு முதியோர் ஓய்வூதியம் திட்டத்தின்கீழ் 37 திருநங்கைகளுக்கு ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையினையும், திருநங்கைகளின் மேம்பாட்டுக்காக தொண்டு நிறுவன உதவியுடன் 2 திருநங்கைகளுக்குதையல் எந்திரங்களும், திருநங்கைகளின் தொழில் முனைவோரை ஊக்குவிக்க ரூ.50 ஆயிரம் மானியம் வழங்கும் திட்டத்தின்கீழ் 7 திருநங்கைகளுக்கு ரூ.3,50 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

    இதே போல் 38 திருநங்கைகளுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்களும், 60 திருநங்கைகளுக்கு குடும்ப அட்டைகளும், முதலமைச்சரின் சூரிய சக்தியால் இயங்கும் பசுமை வீடு திட்டத்தின்கீழ் 2 திருநங்கைகளுக்கு தலா ரூ.2.10 இலட்சம் மதிப்பிலான வீடுகள், திருநங்கைகள் அடையாளஅட்டை 62 திருநங்கைகளுக்கும், முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத்திட்டத்தின்கீழ் 4 திருநங்கைகளுக்கு காப்பீட்டு அட்டையும் வழங்கப்பட்டுள்ளது. விரைவில் திருநங்கைகள் வா ழ்வாதார மேம்பாட்டுக்காக 100 ஆடுகள் வழங்க ப்படவுள்ளது. மேலும், அரசின் மூலம் வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும் மூன்றாம் பாலினத்தவர்கள் அனை வருக்கும் கிடைத்திடும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அரசின் சார்பில் வழங்கப்படும் அனைத்து நலத்திட்டங்களையும் மூன்றாம் பாலினத்தவர்கள் பெற்று,தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி க்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். தொடர்ந்து சிறப்பு முகாமில் மூன்றாம் பாலினத்தவர்கள் வழங்கிய 55 கோரிக்கை மனுக்களை மாவட்ட கலெக்டர் பெற்றுக்கொண்டார். இக்கூட்டத்தில் மாவட்ட சமூக நல அலுவலர் தீபிகா, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், மாவட்ட தொழில்மைய பொது மேலாளர் சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், திருநங்கைகள் பலரும் கலந்துகொண்டனர்.

    Next Story
    ×