என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்](https://media.maalaimalar.com/h-upload/2023/09/06/1945346-sugathar-ilaiyam.webp)
ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- விவசாயிகள் வலியுறுத்தல்
- பட்டா வழங்குவதிலும் காலதாமம் ஏற்படுவதாக புகார்
செய்யாறு:
செய்யாறு தாலுகா அளவிலான விவசாயிகள் குறைதீர்வு கூட்டம், வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் நடந்தது.
தாசில்தார் முரளி தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குனர் சண்முகம் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது:-
விவசாயத்திற்கு காலை சிப்ட்டில் 6 மணிக்கு மின்சார வழங்க வேண்டும். ஏனாதவாடி சுற்றி சுமார் 10 -க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது. இந்தப் பகுதி மக்கள் உடல் நலம் பாதிப்பு ஏற்பட்டால் பெருங்கட்டூர் அல்லது தொழுப்பேடு ஆரம்ப சுகாதார நிலையங்க ளுக்குத்தான் செல்ல வேண்டும்.
பஸ் வசதி இல்லாத காரணத்தால், 2 பஸ்கள் மாறுதலாகி செல்ல வேண்டிய சூழல் உள்ளது. கிராம மக்களின் சுகாதார வசதிக்காக ஏனாதவாடி கிராமத்தில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும். செய்யாறில் ஒருங்கி ணைந்த வேளாண் விரிவாக்கம் மைய கட்டிடம் கட்ட வேண்டும். பிறப்பு இறப்பு சான்றிதழை கேட்டு சப்- கலெக்டர் அலுவல கத்தில் மனு கொடுத்தால், ஒரு வருடம் ஆனாலும் கிடைப்ப தில்லை. விரைவாக சான்றிதழ் கிடைக்க ஆவணம் செய்ய வேண்டும்.
அதேபோல் பட்டா வழங்குவதிலும் காலதாமம் ஏற்படுவதை தடுத்து உடனடியாக பட்டா கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.