என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
உள்ளூர் செய்திகள்
![திருப்பூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை பலி - பெற்றோர் கண்முன்னே பரிதாபம் திருப்பூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை பலி - பெற்றோர் கண்முன்னே பரிதாபம்](https://media.maalaimalar.com/h-upload/2022/08/02/1739829-untitled-1.jpg)
பலியான1 வயது குழந்தை.
திருப்பூரில் பஸ் சக்கரத்தில் சிக்கி 1 வயது குழந்தை பலி - பெற்றோர் கண்முன்னே பரிதாபம்
![மாலை மலர் மாலை மலர்](/images/authorplaceholder.jpg?type=1&v=2)
- மோட்டர் சைக்கிளில் முன்புறத்தில் மகளை அமரவைத்து அழைத்து சென்றுள்ளார்.
- பனியன் கம்பெனி பஸ் ஒன்று ராஜ்குமார் ஒட்டிவந்த பைக்கின் மீது மோதியது.
அவிநாசி :
ஈரோடு மாவட்டம் புஞ்சை புளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர்ராஜ்குமார் (வயது32) இவருடைய மனைவி நூரேத் ஆமின் (வயது24) இவர்களுக்கு ஒரு வயதில் தியானா என்ற குழந்தை உள்ளது. ராஜ்குமார் திருமுருகன்பூண்டி அடுத்த ராக்கியாபாளைம் மாகலெட்சுமி நகரில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். அந்த பகுதியில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் தனது, மனைவி மகளுடன் வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மோட்டர் சைக்கிளில் முன்புறத்தில் மகளை அமரவைத்து அழைத்து சென்று–ள்ளார். அப்போது ராக்கிய–ம்பாளையம் ராசாத்தா குட்டை அருகே மோட்டர் சைக்கிள் சென்றபோது எதிரே வந்த தனியார் பனியன் கம்பெனி பஸ் ஒன்று ராஜ்குமார் ஒட்டிவந்த பைக்கின் மீது மோதியது. இதில் கீழே விழுந்த ஒரு வயது குழந்தை மீது பஸ் சக்கரம் ஏறியது. இதில் படுகாயம் அடைந்த குழந்தையை அக்கம் பக்கத்தினர் மீட்டு தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கே குழந்தையை பரிசோதித்த டாக்டர்கள் இறந்து விட்டதாக கூறினர். இதனையறிந்த குழந்தையின் பெற்றோர் பார்த்து கதறி அழுதனர்.
இந்த சம்பவம் குறித்து அறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் குழந்தையை மீட்டு அவினாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பெற்றோர் கண் முன்பே விபத்து குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதிநில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.