search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாவட்டத்தில் 12½ கோடி மகளிர் கட்டணமில்லா பஸ் பயணம்
    X

    கோப்புபடம்

    திருப்பூர் மாவட்டத்தில் 12½ கோடி மகளிர் கட்டணமில்லா பஸ் பயணம்

    • 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கட்டணமில்லா இலவச பேருந்தில் மகளிர் பயணம் செய்து வருகிறார்கள்.
    • மூன்றாம் பாலினத்தவர்கள் 60 ஆயிரத்து 848 பேர் பயணம் செய்துள்ளனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் மகளிருக்கு கட்டணமில்லா பஸ் பயண திட்டத்தின் கீழ் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி படிக்கும் மாணவிகள் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் சாதாரண கட்டண நகர பஸ்களில் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் பயணம் செய்து வருகிறார்கள். அதன்படி மாவட்டத்தில் திருப்பூர் பணிமனை-1, பணிமனை-2, பல்லடம், காங்கயம், தாராபுரம், உடுமலை பணிமனைகளில் மொத்தம் 254 நகர பஸ்கள் இயக்கப்படுகிறது.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை முதல் கடந்த மாதம் வரை மாவட்டத்தில் 12 கோடியே 34 லட்சத்து 16 ஆயிரத்து 20 மகளிரும், 7 லட்சத்து 25 ஆயிரத்து 671 மாற்றுத்திறனாளிகளும், 43 ஆயிரத்து 591 மாற்றுத்திறனாளிகளின் உதவியாளர்கள், 60 ஆயிரத்து 848 பேர்பயணம் செய்துள்ளனர்.மூன்றாம் பாலினத்தவர்கள் என மொத்தம் 12 கோடியே 42 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இந்த பஸ் பயணத்தால் மகளிர் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்று கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×