search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூா் மாவட்டத்தில் 16 ரேஷன் கடைகள் புதிதாக தொடக்கம் - அமைச்சர் தகவல்
    X

    வீரபாண்டி ஜெ.ஜெ.நகர் நியாய விலைக்கடையில் சுழற்சி முறையில் பொதுமக்களுக்கு அத்தியாவசிய பொருட்களை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கிய காட்சி. 

    திருப்பூா் மாவட்டத்தில் 16 ரேஷன் கடைகள் புதிதாக தொடக்கம் - அமைச்சர் தகவல்

    • திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 1,127 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.
    • 777 முழுநேர நியாய விலைக்கடைகளும், 350 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன.

    திருப்பூர் :

    திருப்பூா் மாநகராட்சி 4-வது மண்டலத்துக்கு உள்பட்ட வீரபாண்டி ஜெ.ஜெ.நகா் நியாய விலைக் கடையில் சுழற்சி முறையில் பொருட்களை விநியோகம் செய்யும் முறையை செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    திருப்பூா் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் 1,127 நியாய விலைக் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 8.06 லட்சம் குடும்ப அட்டைகள் இணைக்கப்பட்டுள்ளன. இதில் 777 முழுநேர நியாய விலைக்கடைகளும், 350 பகுதிநேர நியாயவிலைக் கடைகளும் செயல்பட்டு வருகின்றன. பொங்கலூா் ஊராட்சி ஒன்றியம் குப்பாண்டம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தின்கீழ் 89 முழு நேர நியாய விலைக் கடைகள், 49 பகுதி நேர நியாய விலைக் கடைகள் என மொத்தம் 138 கடைகள் செயல்பட்டு வருகின்றன.

    நியாய விலைக்கடைகளில் சுழற்சி முறையில் பொருட்களை விநியோகம் செய்வதால் கூட்ட நெரிசலைத் தவிா்க்க முடியும். திருப்பூா் மாவட்டத்தில் 5 முழுநேர நியாய விலைக் கடைகளும், 11 பகுதிநேர கடைகள் என மொத்தம் 16 கடைகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது என்றாா்.

    இந்த நிகழ்ச்சியில், திருப்பூா் மாவட்ட கலெக்டர் எஸ்.வினீத், மாநகராட்சி ஆணையா் கிராந்திகுமாா் பாடி, மண்டலத் தலைவா் இல.பத்மநாபன், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் சீனிவாசன், துணைப் பதிவாளா் முருகேசன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

    Next Story
    ×