search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாலக்காடு - சென்னை சென்ட்ரல் ரெயிலில் 16 டன் அளவு பார்சல்களை அனுப்பலாம் - அரசு பஸ்களில் விரைவில் கூரியர் சேவை தொடங்க திட்டம்
    X

    கோப்புபடம்.

    பாலக்காடு - சென்னை சென்ட்ரல் ரெயிலில் 16 டன் அளவு பார்சல்களை அனுப்பலாம் - அரசு பஸ்களில் விரைவில் கூரியர் சேவை தொடங்க திட்டம்

    • பாலக்காடு கோட்ட ரெயில்வே மேலாளர் திரிலோக் கோத்தாரி தலைமையில் வாடிக்கையாளர்களுடனான சந்திப்பு நடந்தது.
    • 7சி கூரியர் சேவையை, அரசு பஸ்களிலும் நடைமுறைக்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது.

    உடுமலை :

    பாலக்காடு கோட்ட ெரயில்வே மேலாளர் திரிலோக் கோத்தாரி தலைமையில் வாடிக்கையாளர்களுடனான சந்திப்பு பொள்ளாச்சியில் உள்ள தனியார் ஓட்டலில் நடந்தது. இதில் விவசாயிகள், தொழில்துறையினர், வணிகர்கள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் தென்னை மற்றும் தென்னை உற்பத்தி பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வது குறித்து சிறப்பு கவனம் செலுத்த விவசாயிகள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.அதற்கு தென்னை பொருட்களை வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்வதற்கு ெரயில்வேயில் உள்ள வசதிகள் குறித்து கோட்ட மேலாளர் விரிவாக தெரிவித்தார்.

    பாலக்காடு - சென்னை சென்ட்ரல் விரைவு ெரயிலில் 16 டன் அளவுக்கு பார்சல்கள் கையாளும் வசதி உள்ளதாகவும், அதை பயன்படுத்தி தென்னை விவசாயிகள் நாட்டின் பல பகுதிகளுக்கும் தங்கள் பொருட்களை கொண்டு செல்லலாம் என கூறினார்.

    மேலும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப பண்ணை விளைபொருட்களை கொண்டு செல்ல சரக்கு ரேக்குகள் கொள்கலன்களையும், சிறப்பு ெரயில்களையும் ெரயில்வே ஏற்பாடு செய்யும் எனவும் தெரிவித்தார்.

    அரசு விரைவு போக்குவரத்து கழக (எஸ்.இ.டி.சி.,) பஸ்களில் உள்ள 7சி கூரியர் சேவையை, அரசு பஸ்களிலும் நடைமுறைக்கு கொண்டு வர ஆலோசிக்கப்பட்டுள்ளது. எஸ்.இ.டி.சி., பஸ்கள் வாயிலாக பார்சல்களை அனுப்பி வைக்கும் 7சி கூரியர் சேவை திட்டம் அமலில் உள்ளது. சென்னை, கோவை, நாகர்கோவில், திருச்சி, சேலம், விழுப்புரம், கும்பகோணம், மதுரை உள்ளிட்ட எஸ்.இ.டி.சி., பணிமனைகளில் இருந்து 5 முதல் 80 கிலோ வரை பார்சல், கி.மீ.,க்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்து அனுப்பி வைக்கப்படுகிறது.

    மாநிலம் விட்டு மாநிலம் செல்லும் 300 கி.மீ.,க்கு அதிகமாக பயணிக்கும் எஸ்.இ.டி.சி., பஸ்களில் மட்டுமே உள்ள இந்த திட்டத்தை அரசு பஸ்களிலும்(டி.என்.எஸ்.டி.சி.,) நடைமுறைப்படுத்த போக்குவரத்து துறை ஆலோசித்து வருகிறது.

    இது குறித்து திருப்பூர் போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில், எஸ்.இ.டி.சி., பஸ்கள் நீண்ட தூரம் பயணம் என்பதால், பார்சல் முன்பதிவு சற்று குறைவாகவே உள்ளது. மாவட்டம் விட்டு மாவட்டம் 150 கி.மீ., வரையிலான பயணத்துக்கு பார்சல்களை அனுப்ப வசதியுள்ளதா என்று வாடிக்கையாளர்கள் கேட்கின்றனர்.ஒவ்வொரு கோட்டத்திலும், 150 முதல் 250 கி.மீ., சென்று திரும்பும் தொலைதூர பஸ்கள் குறித்த விபரம் சேகரிக்கப்பட்டு வருகிறது. டி.என்.எஸ்.டி.சி., பஸ்களில் பார்சல் சேவை அடுத்தாண்டு துவங்கப்பட உள்ளது என்றனர்.

    Next Story
    ×