search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு 2 பேர் கைது
    X

    கோப்புபடம்.

    வெள்ளகோவிலில் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு 2 பேர் கைது

    • தங்க நகைகள் 1 .1/4 பவுன் காணாமல் போனது.
    • தனி குழு அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள அருகே உள்ள பச்சாபாளையம் கிராமம் பகுதியைச் சேர்ந்தவர் சௌந்தரராஜன் (50) இவரது மனைவி செல்வராணி வயது (45) இருவரும் கூலித் தொழிலாளி. கடந்த மாதம் 27 ந்தேதி புதன் கிழமை காலை 9 மணி அளவில் வீட்டை பூட்டிவிட்டு இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். பிறகு வேலை முடிந்து 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு பீரோ திறந்த நிலையில் இருந்தது.

    இவர் வீட்டை பூட்டிவிட்டு வீட்டு சாவியை வீட்டின் முன் உள்ள குளியல் அறையில் வைத்து விட்டு செல்வது வழக்கம், அதேபோல் சம்பவத்தன்று சாவியை குளியல் அறையில் வைத்து விட்டு வெள்ளகோவிலுக்கு வேலைக்கு சென்று விட்டு மாலை 5 மணிக்கு மேல் வீட்டிற்கு வந்தபோது வீட்டின் கதவு திறந்த நிலையில் இருந்துள்ளது. அதிர்ச்சி அடைந்த மகேஸ்வரன் வீட்டிற்குள் சென்று பார்க்கும் போது பீரோவில் இருந்த தங்க நகைகள் 1 .1/4 பவுன் காணாமல் போனது தெரியவந்தது இது குறித்து மகேஸ்வரன் வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.இந்த இரண்டு திருட்டு சம்பவங்கள் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவின் பேரில், காங்கேயம் போலீஸ் துணை சூப்பரெண்டு பார்த்திபன் மேற்பார்வையில், வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமாதேவி உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர்கள் ஜெயக்குமார், முத்துக்குமார் மற்றும் காவலர்கள் கோபிநாத், சிவசுப்பிரமணியன் ஆகியோர் கொண்ட தனி குழு அமைத்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.நேற்று திங்கட்கிழமை காலையில் வெள்ளகோவில் அருகே குருக்கத்தி என்ற இடத்தில் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது பைக்கில் வந்த 2 பேரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது இந்த இரண்டு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்ட நபர்கள், தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள திருக்கருக்காவூர்,தெற்கு தெரு குமரன் ( எ ) முத்துக்குமாரன் (27) தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உள்ள நெடுஞ்சேரி பகுதியைச் சேர்ந்த குருமூர்த்தி (22) என்பது தெரிய வந்தது.

    அவர்களை கைது அவர்கள் ஓட்டி வந்த மோட்டர் சைக்கிள் மற்றும் தங்க நகைகள், செல்போன்களை கைப்பற்றி காங்கயம் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குமரன் ( எ) முத்துக்குமரன் மற்ற சிலருடன் சேர்ந்து தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருப்பூர், ஊத்துக்குளி, வெள்ளகோவில் ஆகிய பகுதிகளில் பல்வேறு திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்துள்ளது தெரியவந்துள்ளது.

    Next Story
    ×