என் மலர்
உள்ளூர் செய்திகள்
X
குமரானந்தபுரம் அரசு பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்ட ரூ.20 லட்சம் நிதியுதவி
Byமாலை மலர்10 Jun 2023 10:31 AM IST
- காசோலையை மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்கள்.
- நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது.
திருப்பூர் :
திருப்பூர் புதிய பஸ் நிலையம் அருகே குமரானந்தபுரம் நகராட்சி உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணிக்காக, நமக்கு நாமே திட்டத்தின் கீழ் கவுன்சிலர்கள் ராதாகிருஷ்ணன் (22-வது வார்டு), பத்மாவதி (21-வது வார்டு), பள்ளி மேலாண்மை குழு, கிராம கல்விக்குழு, பெற்றோர் மற்றும் ஆசிரியர் கழக நிர்வாகிகளின் பங்களிப்பு தொகையாக ரூ.20 லட்சத்து 7 ஆயிரத்துக்கான காசோலையை மேயர் தினேஷ்குமாரிடம் வழங்கினார்கள்.
இதில் 1-வது மண்டல தலைவர் உமா மகேஸ்வரி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
Next Story
×
X