என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் தெற்கு மாநகர பகுதியில் 4-வது திட்ட குடிநீர் சோதனை ஓட்டம் தொடங்கியது - மேயர் ஆய்வு
- வடக்கு பகுதியில் குடிநீர் வினியோக பிரச்சினை தலைதூக்கவில்லை.
- 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும்.
திருப்பூர் :
திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 2-வது மற்றும் 3-வது குடிநீர் திட்டம் மூலமாக குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில் புதிதாக 4-வது குடிநீர் திட்டம் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் எடுக்கப்பட்டு குழாய் மூலமாக திருப்பூர் கொண்டு வரப்பட்டது. திருப்பூர் வடக்கு மாநகர பகுதிகளில் கடந்த மாதம் 4-வது திட்ட குடிநீர் மேல்நிலைத்தொட்டிகளில் ஏற்றப்பட்டு சோதனை அடிப்படையில் வினியோகம் செய்யப்பட்டது. இதனால் வடக்கு பகுதியில் குடிநீர் வினியோக பிரச்சினை தலைதூக்கவில்லை.
ஆனால் தெற்கு மாநகர பகுதியில் 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக மக்கள் புகார் தெரிவித்தனர். கடந்த மாமன்ற கூட்டத்திலும் கவுன்சிலர்கள் முறையிட்டனர். இந்த மாத இறுதிக்குள் தெற்கு பகுதியில் 4-வது திட்ட குடிநீர் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டு 6 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் உறுதியளித்தார்.
இந்தநிலையில் நேற்று 4-வது திட்ட குடிநீர் திருப்பூர் தெற்கு மாநகர பகுதிக்கு வந்து சேர்ந்தது. சோதனை ஓட்டமாக ஆலங்காடு மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு குடிநீர் வந்து சேர்ந்தது. மேயர் தினேஷ்குமார் மலர் தூவி குடிநீரை வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் தி.மு.க. தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராஜன், கவுன்சிலர் சாந்தாமணி மற்றும் தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
குடிநீர் பரிசோதனைக்கு உட்பட்டு வெள்ளோட்டம் விடப்படுகிறது. பகிர்மான குழாய்களில் தண்ணீர் விடப்பட்டு சோதனை நடத்தப்பட உள்ளது. இந்த மாத இறுதிக்குள் தெற்கு மாநகர பகுதியில் உள்ள 16 மேல்நிலைத்தொட்டிகளில் தண்ணீர் ஏற்றி பொதுமக்களுக்கு வினியோகிக்கப்படும் என்று மேயர் தினேஷ்குமார் தெரிவித்தார்.