என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் ரெயில் நிலையத்தில் ஆவணங்கள் இல்லாத 50 பனியன் பண்டல்கள் பறிமுதல் - வணிக வரித்துறை அதிகாரிகள் நடவடிக்கை
- உள்நாட்டு ஆடை வகைகள் அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது.
- வணிகவரித்துறை பறக்கும் படையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
திருப்பூர் :
திருப்பூரில் உற்பத்தியாகும் பனியன் உள்ளிட்ட உள்நாட்டு ஆடை வகைகள் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, மராட்டியம், டெல்லி உள்பட அனைத்து மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் அனுப்பப்படும் ஆடை பண்டல்கள் பெரும்பாலும் ரெயில்கள் மூலம் அனுப்பப்படுகிறது.
இந்த நிலையில் திருப்பூரில் இருந்து அனுப்பப்படும் ஆடைகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்படுவதாக ஈரோடு வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதன் பேரில் திருப்பூர் ரெயில்நிலைய பார்சல் பிரிவில் வணிகவரித்துறை பறக்கும் படையை சேர்ந்த 5 பேர் கொண்ட குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
இதில் பில் உள்பட முறையான ஆவணங்கள் இன்றி ஒருசில மாநிலங்களுக்கு அனுப்ப வைக்கப்பட்டிருந்த 50 பனியன் மற்றும் ஆடை பண்டல்கள் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்பிலான துணிகளை ஈரோடு வணிகவரித்துறை அலுவலகத்திற்கு அதிகாரிகள் எடுத்துச் சென்றனர்.