search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் மாட்டுச்சந்தையில் 700 மாடுகள் ரூ.1½ கோடிக்கு விற்பனை
    X

    விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட மாடுகளை படத்தில் காணலாம்.

    திருப்பூர் மாட்டுச்சந்தையில் 700 மாடுகள் ரூ.1½ கோடிக்கு விற்பனை

    • அமராவதிபாளையத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம்.
    • மொத்தம் 762 மாடுகள், எருமைகள், கன்று குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.

    திருப்பூர் :

    திருப்பூர் பெருந்தொழுவு சாலை, அமராவதிபாளையத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மாட்டு சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி வெளி மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து மாடுகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த வாரம் நடந்த மாட்டு சந்தையில் பல்வேறு இடங்களில் இருந்து விற்பனைக்கு மாடுகள் கொண்டுவரப்பட்டன.

    கடந்த வாரத்தை விட இந்த வாரம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தது. இதனால் திருப்பூர் மாட்டு சந்தை களைகட்டியது. இந்த சந்தைக்கு மொத்தம் 762 மாடுகள், எருமைகள், கன்று குட்டிகள் என சரக்கு வாகனங்களில் ஏற்றி விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன.கடந்த வாரத்தை விட இந்த வாரம் கன்று குட்டியின் விலை குட்டியை பொறுத்து ரூ.12 ஆயிரம் முதல் ரூ.14 ஆயிரம் வரை விலை போனது. மாடுகள் ரூ.35 ஆயிரம் முதல் ரூ.38 ஆயிரம் வரை விலை போனது. காலை 8 மணி முதலே வியாபாரிகள் சந்தைக்கு வர தொடங்கினர்.

    இதனால் பெருந்தொழுவு சாலையில் 1 கிலோ மீட்டர் தொலைவுக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. கேரளாவில் இருந்து சுமார் 50-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மாடுகளை வாங்குவதற்கு வந்திருந்தனர். இதனால் விற்பனையும் விறு, விறுப்பாக நடந்தது.

    பொள்ளாச்சி, கோவை, மயிலாடுதுறை, கோபி, குன்னத்தூர், நம்பியூர், அவினாசி, காங்கயம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வியாபாரிகள் மாடுகளை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். இந்த வாரம் ரூ.1 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்திற்கு வர்த்தகம் நடைபெற்றது. 762 மாடுகளில் 53 மாடுகள் விற்பனையாகவில்லை. இதனால் கொண்டுவந்த மாடுகளை விவசாயிகள் திரும்ப அழைத்து சென்றனர். சந்தையில் விவசாயிகள், வியாபாரிகள், இடைத்தரகர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். வழக்கத்தைவிட மாடுகள் வரத்து அதிகரித்து இருந்தபோதிலும் விலை குறையவில்லை.

    Next Story
    ×