search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ரூ.7.11 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு
    X

    வளா்ச்சித் திட்டப் பணிகளை கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்த காட்சி.

    ரூ.7.11 கோடி மதிப்பில் வளா்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் ஆய்வு

    • வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.
    • வகுப்பறைகள் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    காங்கயம் :

    திருப்பூா் மாவட்டம், காங்கயம் ஒன்றியம், படியூா் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கனிமங்கள் மற்றும் குவாரிகள் சிறு கனிம திட்டத்தின் கீழ் ரூ.19.60 லட்சம் மதிப்பீட்டில் 2 வகுப்பறைகள் கட்டும் பணிகள், கிராமப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.3.08 கோடி மதிப்பீட்டில் எஸ்.என்.எம். சாலை முதல் படியூா் வரை சாலை மேம்படுத்துதல், சிவன்மலையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் ரூ.9.59 லட்சம் மதிப்பீட்டில் நாற்றாங்கால் அமைத்தல், ரூ.3.13 கோடி மதிப்பீட்டில் காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கட்டுமானப் பணிகள் என ரூ.7.11 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சித் திட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

    மேற்கண்டப் பணிகளை கலெக்டர் தா.கிறிஸ்துராஜ் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, வளா்ச்சித் திட்டப் பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா். இதையடுத்து, காங்கயம் வட்டாட்சியா் அலுவலகம், காங்கயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பாராமரிக்கப்பட்டு வரும் கோப்புகளை ஆய்வு செய்தாா். ஆய்வின்போது, தாராபுரம் வருவாய் கோட்டாட்சியா் குமரேசன், காங்கயம் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் ராகவேந்திரன், விமலாதேவி ஆகியோா் உடனிருந்தனா்

    Next Story
    ×