search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் உண்டியலில் ரூ.15 லட்சம் காணிக்கை
    X

    அறநிலைத்துறை பணியாளர்கள் உண்டியலில் காணிக்கை எண்ணிய காட்சி.

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் உண்டியலில் ரூ.15 லட்சம் காணிக்கை

    • கோவிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தேர் திருவிழா நடைபெற்றது.
    • 48 கிராம் தங்கம், 157 கிராம் வெள்ளியும் செலுத்தப்பட்டு இருந்தது.

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில் ஆகும். இந்த கோவிலில் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த பிப்ரவரி மாதம் தேர் திருவிழா நடைபெற்றது. இந்த கோவில் உண்டியல் திறப்பு கடந்த 2022 ம் ஆண்டு நவம்பர் 25ந்தேதிக்கு பிறகு நேற்று வியாழக்கிழமை இந்து சமய அறநிலைய த்துறை திருப்பூர் உதவி ஆணையர் செந்தில்குமார் தலைமையில் செயல் அலுவலர் ராமநாதன், காங்கயம் ஆய்வாளர் அபிநயா முன்னிலையில் திறக்கப்ப ட்டது. பக்தர்கள் செலுத்திய காணிக்கைகளை அறநிலைத்துறை பணியா ளர்கள் எண்ணினார்கள்.

    அதில் ரூ.15 லட்சத்து 70 ஆயிரத்து 323 ரொக்கமும், 48 கிராம் தங்கம், 157 கிராம் வெள்ளியும் செலுத்தப்பட்டு இருந்தது. இந்த தகவலை கோவில் நிர்வாக அதிகாரி தெரிவித்தார்.

    Next Story
    ×