search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதலிபாளையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது
    X

    கோப்புபடம்.

    முதலிபாளையத்தில் இலவச சிறப்பு மருத்துவ முகாம் நாளை நடக்கிறது

    • காலை 9 மணி முதல் மதியம் 1மணி வரை முகாம் நடக்கிறது.
    • சர்க்கரை மற்றும் கண்புரை சிகிச்சை முகாம் அங்கன்வாடி மையத்தில் நடைபெறுகிறது..

    திருப்பூர் :

    இந்திய சமூக நலன் மற்றும் மேம்பாட்டு குழு மற்றும் சக்தி நர்சிங் ஹோம், லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் இலவச சர்க்கரை மற்றும் கண்புரை சிகிச்சை முகாம், சிறப்பு மருத்துவ முகாம் நாளை 2-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) திருப்பூர் முதலிபாளையம் ஹவுசிங் யூனிட் அங்கன்வாடி மையத்தில் நடைபெறுகிறது. காலை 9மணி முதல் மதியம் 1மணி வரை முகாம் நடக்கிறது.

    முகாமை டாக்டர் எஸ். சஞ்சய், ஐஎஸ்டபிள்யூடி., பொதுச்செயலாளர் ராமமூர்த்தி, மாநில இணை செயலாளர் எஸ்.வி. வீரைய்யா ஆகியோர் தலைமை தாங்கி தொடங்கி வைக்கின்றனர். இளைஞரணி மாநில தலைவர் என்.செல்வம், இளைஞரணி மாநில செயலாளர் வண்மீகன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

    திருப்பூர் மாவட்ட செயலாளர் குமார், மாவட்ட உறுப்பினர் ஹரிஹரன் , மாவட்ட நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் வரவேற்கின்றனர். சிறப்பு விருந்தினர்களாக முதலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மயூரி பிரியா நடராஜன் , துணை தலைவர் சுமதி செந்தில் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

    முகாமில் சர்க்கரை அளவு மற்றும் ரத்த அழுத்தம் அளவு பார்க்கப்படுகிறது. சர்க்கரை நோய் மற்றும் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உள்ளது. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் கண் சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் மருத்துவ ஆலோசனை வழங்கப்படும். தலைவலி, கிட்டப்பார்வை, தூரப்பார்வை, கண்கட்டி, மாறுகண், நீர்வடிதல், ஒற்றைத்தலைவலி, நீர் அழுத்தம், சர்க்கரை நோய், விழித்திரை பாதிப்பு, கண்புரை, கருவிழியில் வெள்ளை இருத்தல் ஆகிய பாதிப்புகளுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும். இந்த முகாமில் தேர்ந்தெடுக்கப்படும் நோயாளிகளுக்கு குறிப்பிட்ட அறுவை சிகிச்சை முதலமைச்சரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும். இதில் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×