என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திருப்பூர் மாவட்ட பள்ளிவாசல்களில் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை- திரளானோர் பங்கேற்பு
- உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள்.
- ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது.
திருப்பூர் :
உலகம் முழுவதும் இஸ்லாமியர்கள் ஆண்டு தோறும் இரண்டு பெருநாளை கொண்டாடுவார்கள். ஒன்று ரம்ஜான் பண்டிகை. மற்றொன்று பக்ரீத் பண்டிகை ஆகும்.புனித ரமலான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு இருந்து அதன் இறுதியில் கொண்டாடப்படுவது ரம்ஜான் பண்டிகையாகும்.
இந்த நிலையில் நாடு முழுவதும் இன்று பக்ரீத் பண்டிகை கொண்டாடப்–பட்டது. இறைத்தூதர் இப்ராஹீம் நபியின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.
இப்ராஹீம் நபி தான் கண்ட கனவின்படி தனது மகன் இஸ்மாயிலை அறுத்துப் பலியிட துணிந்தார். அப்போது வந்த இறைக்கட்டளை மகனை அறுக்க வேண்டாம் என்றும், அதற்கு பதிலாக ஒரு ஆட்டை இறைவனுக்காக பலியிடுமாறும் கூறப்பட் டது. அத–ன்படியே அவர் அக்கடமையை நிறைவேற்றினார்.இறைக்கட்டளை என்ற தும் தனது மகனையே பலி கொடுக்க முயன்ற இந்தத் தியாகம் தான் இந்த பண்டிகையின் பின்னணியாகும்.
இந்த தியாகத் திருநாளில் சிறப்பு தொழுகை நடத்தியும், கால்நடைகளான ஆடு, மாடு, ஒட்டகங்களை பலியிட்டு அதன் இறைச்சிகளை உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும் கொடுத்தும் கொண்டாடப்படும்.ஈதுல் அல்ஹா எனும் இந்த தியாகத் திருநாள் ஹஜ் பெருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இத்திருநாள் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், பல்லடம், உடுமலை, தாராபுரம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத் பண்டிகை வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. அைனத்து பள்ளிவாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெற்றது.
திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள பள்ளிவாசலில் திருப்பூர் மாநகர பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்காேனார் ஒன்று கூடி உலக அமைதி வேண்டி கூட்டு தொழுகையில் ஈடுபட்டனர். தொழுகைக்கு பின் ஒருவரை ஒருவர் கட்டித்தழுவி தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். இனிப்புகள் வழங்கியும் உற்சாகமாக கொண்டாடினர். இதுபோல் திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி பள்ளியிலும் சிறப்பு தொழுகை நடந்தது. இதிலும் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று பக்ரீத் பண்டிகை தொழுகையில் ஈடுபட்டனர்.
திருப்பூர் பெரிய பள்ளிவாசல், காதர்பேட்டை பள்ளிவாசல், கோம்பைத்தோட்டம் பள்ளிவாசல் உள்ளிட்ட பள்ளிவாசல்களில் இன்று காலை பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை நடந்தது. அதுபோல் பெரிய பள்ளிவாசலில் தொழுகை நடந்தது. சி.டி.சி. கார்னர் அல் அமீன் பள்ளி வளாகத்தில் சிறப்பு தொழுகை நடைபெற்றது. இதில் திரளானோர் கலந்துகொண்டனர். பக்ரீத் பண்டிகையையொட்டி முஸ்லிம்கள் புத்தாடை அணிந்து சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு, குர்பானி கொடுத்து கொண்டாடினர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்