என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
பொதுமக்களுக்கு சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டி
- உலக உணவு தினத்தினை முன்னிட்டு சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டிகளை மக்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.
- வ. உ .சி. விலங்கியல் பூங்கா முன்னாள் இயக்குனர் பறவை விலங்கியல் தொடர்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்
பல்லடம் :
பல்லடம் அருகேயுள்ள காரணம்பேட்டையில் அமைந்துள்ள மகிழ்வனம் தாவரவியல் பூங்காவில் உலக உணவு தினத்தினை முன்னிட்டு சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டிகளை மக்களுக்கு வழங்கும் விழா நடைபெற்றது.இந்த விழாவிற்கு கோடங்கிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் கா.வீ. பழனிச்சாமி தலைமை வகித்து இலவசமாக சிட்டுக்குருவிகள் அடைகாக்கும் பெட்டிகளை பொதுமக்களுக்கு வழங்கினார்..மகிழ் வனம் செயலாளர் சோமு என்ற பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். விழாவில் தனியார் நிறுவன நிர்வாக இயக்குநர் மாரப்பன், தாய்மண் பாதுகாப்பு அறக்கட்டளை தலைவர் பாலசுப்பிரமணியம், தனியார் நிறுவன தலைவர் செல்வராஜ், கலங்கல் வனம் ஒருங்கிணைப்பாளர் பாபு, தாவரவியல் நிபுணர் மாணிக்கம், பூங்கா பொருளாளர் சந்திரசேகர் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இதில் வ. உ .சி. விலங்கியல் பூங்கா முன்னாள் இயக்குனர் மருத்துவர் கிரிஷ் அசோகன் தனது பறவை விலங்கியல் தொடர்பு அனுபவங்களை பகிர்ந்து கொண்டார். மகிழ் வனம் பொருளாளர் பூபதி நன்றி கூறினார்.