search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோரிக்கைகளை கேட்டறிய வாட்ச்டாக் கமிட்டி அமைக்க வேண்டும் -ஆவின் பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு
    X

    கோப்புபடம்.

    கோரிக்கைகளை கேட்டறிய வாட்ச்டாக் கமிட்டி அமைக்க வேண்டும் -ஆவின் பால் உற்பத்தியாளர்கள் எதிர்பார்ப்பு

    • கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பால் கொள்முதல் விலையானது உயர்த்தப்பட்டது.
    • தீவனங்களின் விலை, மருத்துவ செலவுகள், பணியாளர்கள் ஊதியம் உயர்ந்துள்ளது.

    தாராபுரம் :

    தமிழகத்தில் விவசாயத்து க்கு அடுத்ததாக கால்நடை வளர்ப்பு பிரதானமாக உள்ளது. பால் உற்பத்தி செய்யும் விவசாயிகள் ஆவின் நிறுவனத்துக்கு வழங்குகின்றனர். கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பால் கொள்முதல் விலையானது உயர்த்தப்பட்டது. இதுவரை அதே விலை தான் வழங்கப்படுகிறது. கறவை மாடுகளுக்கு தேவையான உலர் மற்றும் அடர் தீவனங்களின் விலை, மருத்துவ செலவுகள், பணியாளர்கள் ஊதியம் உயர்ந்துள்ளது.எனவே பால் உற்பத்தியாளர்களின் நியாயமான கோரிக்கைக ளுக்கு அரசு கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

    இது குறித்து திருப்பூர் மாவட்ட ஆவின் பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:- தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு 45 ரூபாய் வழங்குகிறது. எனவே அரசு பசும்பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு 10 ரூபாயும், எருமை பால் லிட்டருக்கு 12 ரூபாய் வீதம் உயர்த்த வேண்டும்.

    கடந்த ஆண்டு வரை அமுல் மற்றும் வேறு மாநில மார்க்கெட்டிங் பெடரேசன்களில் இருந்து கலப்பு தீவனம், 50 கிலோ மூட்டையை 925 ரூபாய்க்கு கொள்முதல் செய்து மானியம் போக 725 ரூபாய்க்கு வினியோகிக்க ப்பட்டது.ஆவின் வாயிலாக உற்பத்தி செய்யப்படும் கலப்பு தீவன மூட்டை விலை 1,070 ரூபாயாகும். இதற்கு மானியம் போக 770 ரூபாய்க்கு வினியோகிக்கப்ப ட்டது. கடந்த ஆண்டு ஒன்றியங்களில் கலப்பு தீவன மானியம் முற்றிலுமாக நிறுத்தப்பட்டுள்ளது. எனவே கலப்பு தீவன மானியமாக கிலோ ஒன்றுக்கு 5 ரூபாய் வழங்கி 820 ரூபாய்க்கு விற்க வேண்டும்.

    ஆவின் ஒன்றியம், பிற மாநில கூட்டுறவு இணைய ங்களில் இருந்து பெற்று பால் உற்பத்தியாளர்களுக்கு வழங்கும் கலப்புத்தீவன விலையை விட ஆவின் இணையத்தின் கலப்பு தீவன விலை கிலோவுக்கு 2.90 ரூபாய் அதிகமாக உள்ளது. இந்த விலையை குறைக்க வேண்டும்.ஆவின் ஒன்றியங்களில் கடந்த காலங்களில் லாபத்தில் இருந்து பால் உற்பத்தியாள ர்களுக்கு ஊக்கத்தொ கையாக அந்தந்த ஆண்டு வழங்கிய பாலுக்கு லிட்டருக்கு 50 பைசா முதல் 1.50 ரூபாய் வரை ஒவ்வொரு ஆண்டும் வழங்கியது. ஆனால் கடந்த 7 ஆண்டு களாக ஊக்கத்தொகை வழங்குவது முற்றிலும் தவிர்க்கப்படுகிறது. இது குறித்து ஆய்வு செய்து ஊக்கத்தொகை வழங்க வேண்டும். தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின் 3 ரூபாய் குறைத்ததால் ஆவின் இணையம், மாவட்ட ஒன்றியங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதை சரி செய்ய நுகர்வோருக்கு குறைத்து வழங்கிய 3 ரூபாயை மானியமாக வழங்க வேண்டும்.அரசு பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும் குழந்தைகள், அங்கன்வாடி குழந்தைக ளுக்கு ஆவின் பால் பவுடர் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.

    பால் உற்பத்தியாளர்கள் இணையம், ஆவின் மாவட்ட ஒன்றியங்கள், பால் உற்பத்தியாளர்கள் சங்கங்களின் கோரிக்கைகள் மற்றும் கருத்துக்களை நேரடியாக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்ல 1999 - 2000ம் ஆண்டில் அப்போது முதல்வராக இருந்த கருணாநிதி வாட்ச் டாக் கமிட்டி அமைத்து இரு அனுபவம் வாய்ந்த நபர்களை நியமனம் செய்தனர்.அதே போன்று மீண்டும் கமிட்டி அமைக்க அரசு முன்வர வேண்டும். இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக முதல்வ ருக்கு மனு அனுப்பப்பட்டு ள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×