search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வெள்ளகோவிலில் நிதி நிறுவனத்தில் திருடிய வாலிபர் கைது
    X

    கோப்புபடம்.

    வெள்ளகோவிலில் நிதி நிறுவனத்தில் திருடிய வாலிபர் கைது

    • பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார்.
    • ரூ.2 லட்சம் மற்றும் ஆர்.சி. புக் காணாமல் போனது

    வெள்ளகோவில் :

    வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சுபாஷ்(வயது 30). இவர் வெள்ளகோவிலில், பழைய பஸ் நிலையம் அருகே ஆட்டோ பைனான்ஸ் நடத்தி வருகின்றார்.இவர் கடந்த மாதம் ஜூலை29ந் தேதி வெள்ளி கிழமை வழக்கம் போல் காலை 10 மணிக்கு பைனான்சைத்திறந்து, மாலை 4 மணி வரை இருந்துவிட்டு, வசூல் ஆன ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் பைக் ஆர்சி புக் ஆகியவற்றை டேபிளில் வைத்து பூட்டிவிட்டு, பைனான்சின் கண்ணாடி கதவை மட்டும் பூட்டிவிட்டு சட்டரை பூட்டாமல் வெளியே சென்று விட்டார். பிறகு 6 மணிக்கு மேல் வந்து பார்த்தபோது கண்ணாடி கதவு பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார், உடனே உள்ளே சென்று டேபிளை பார்க்கும்போது டேபிளினுடைய பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மற்றும் ஆர் சி புக் காணாமல் போனது தெரிய வந்தது, உடனே அக்கம் பக்கம் விசாரித்து பார்த்து தகவல் எதுவும் கிடைக்கவில்லை,

    இது குறித்து வெள்ளகோவில் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ரமாதேவி, சப் இன்ஸ்பெக்டர் ராஜமூர்த்தி ஆகியோர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருந்த ஈரோடு, எல்லப்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஜெகநாதன் மகன் சந்தோஷ் (24)என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த ரூ.10 ஆயிரம் மற்றும் இந்த திருட்டுக்கு பயன்படுத்திய பைக்கை கைப்பற்றினர். பின்னர் சந்தோஷை காங்கேயம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். நீதிபதி இந்த மாதம் 25ந் தேதி வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து தாராபுரம் கிளை சிறையில் சந்தோஷ் அடைக்கப்பட்டார்.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தலைமறைவாக உள்ள 2 பேரை வெள்ளகோவில் போலீசார் தேடி வருகின்றனர்.

    Next Story
    ×