என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தபால் துறையில் விபத்து காப்பீடு மற்றும் இ-பாஸ்புக் சேவை
- வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்குவது போலவே தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்கலாம் என்பது அனைவரும் அறிந்தது
- வங்கி இல்லாத சிறிய கிராமங்களிலும் தபால் நிலையம் மூலமாக சாமானியர்கள் சேமிப்பு கணக்கு துவங்கியுள்ளனர்.
திருப்பூர் :
வங்கிகளில் சேமிப்பு கணக்கு துவங்குவது போலவே தபால் நிலையத்தில் சேமிப்பு கணக்கு துவங்கலாம் என்பது அனைவரும் அறிந்தது. வங்கி இல்லாத சிறிய கிராமங்களிலும் தபால் நிலையம் மூலமாக சாமானியர்கள் சேமிப்பு கணக்கு துவங்கியுள்ளனர். இங்கு 9வகையான சேமிப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.இத்திட்டங்களில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு, செல்போன் எண் மூலமாக கணக்கை எளிதில், கையாளும் வகையில், இ பாஸ்புக் வசதியை தபால் துறை அறிமுகம் செய்துள்ளது.
இது குறித்து திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் கூறியதாவது:-
இந்திய தபால் துறையின் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் 'இ பாஸ்புக்' வசதிக்கான லிங்க் வழங்கப்பட்டுள்ளது. இதில் எந்நேரமும் சேமிப்பு கணக்குகளின் இருப்பு, முழுமையான பரிவர்த்தனை விவரங்கள் அனைத்தையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். பதிவிறக்கம் செயது கொள்ளலாம்.வாடிக்கையாளர் தங்கள் செல்போன் எண்ணை சேமிப்பு கணக்கில் இணைத்தால் போதும். நெட்பேங்கிங், மொபைல் பேங்கிங், வசதி இல்லை எனினும் சேமிப்பு கணக்கு இருப்புத்தொகை, தபால் அலுவலக சேமிப்பு கணக்கின் முழுமையான பரிவர்த்தனை விவரங்களை அறியலாம். செல்வமகள் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி கணக்குகளின் குறைந்த பரிவர்த்தனை விபரங்களை தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.
ரூ.10 லட்சத்துக்கு விபத்து காப்பீடு தபால் துறையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்து திருப்பூர் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் கூறியதாவது:-இத்திட்டத்தில் 18 முதல் 65 வயதுள்ளவர்கள் சேரலாம். தபால்காரர் மூலம் விரல் ரேகையை பதிவு செய்து 399 ரூபாய் செலுத்தி 5 நிமிடங்களில் காப்பீடு திட்டத்தில் இணையலாம்.விபத்தினால் ஏற்படும் உயிரிழப்பு, நிரந்தர முழு ஊனம், பகுதி ஊனம், பக்கவாதம் ஏற்பட்டால் 10 லட்சம் ரூபாய், விபத்தினால் ஏற்படும் மருத்துவ செலவுகள் உள்நோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் 60 ஆயிரம், புறநோயாளி செலவுகளுக்கு அதிகபட்சம் 30 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.விபத்தினால் மரணம், பக்கவாதம் ஏற்பட்டவரின் குழந்தைகளின் (அதிகபட்சம் இரண்டு குழந்தைகள்) கல்வி செலவுக்கு ஒரு லட்சம் வரை வழங்கப்படும். விபத்தினால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நாட்களுக்கு தினப்படி தொகையாக ஆயிரம் ரூபாய் (9 நாட்களுக்கு), விபத்தில் பாதிக்கப்பட்டவரை பார்க்க செல்லும் குடும்பத்தினரின் பயணச் செலவுகளுக்கு அதிகபட்சம் 25 ஆயிரம், விபத்தில் ஒருவர் உயிரிழக்க நேரிட்டால் ஈமக்கிரியை செய்ய 5 ஆயிரம் வரை வழங்கப்படும்.விபத்துகளால் ஏற்படும் உடல் நலம், நிதி நெருக்கடிகளையும் உயிரிழப்பு களால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்யலாம். இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்