என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சுதந்திர தினத்தன்று தொழிலாளர்களை பணிக்கு அமர்த்திய 48 நிறுவனங்கள் மீது நடவடிக்கை - தொழிலாளர் உதவி ஆணையாளர் தகவல்
- 37 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
- 24 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன.
திருப்பூர் :
திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் திருப்பூர் நகரம், காங்கயம், தாராபுரம், உடுமலை பகுதிகளில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் தேசிய பண்டிகையான சுதந்திர தினத்தன்று ஆய்வு மேற்கொண்டனர்.
சுதந்திர தினத்தன்று தொழில் நிறுவனங்களில் பணிக்கு அமர்த்தியுள்ள தொழிலாளர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அல்லது சம்பளத்துடன் கூடிய மாற்றுவிடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர்களின் சம்மதத்துடன் சம்பந்தப்பட்ட தொழிலாளர் துணை, உதவி ஆய்வாளர்களுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும். நேற்று தொழிலாளர்களை பணிக்கு அமர்த்தியது தொடர்பாக, 37 கடைகள் மற்றும் நிறுவனங்களில் ஆய்வு செய்தனர். இதில் 24 முரண்பாடுகள் கண்டறியப்பட்டன. உணவு நிறுவனங்களில் ஆய்வு செய்தபோது 51 முரண்பாடுகளும் என மொத்தம் 48 நிறுவனங்களில் 75 முரண்பாடுகள் கண்டறியப்பட்டு அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த தகவலை தொழிலாளர் உதவி ஆணையாளர் (அமலாக்கம்) மலர்கொடி தெரிவித்துள்ளார்.