என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியாா் பள்ளிகள் மீது நடவடிக்கை - கலெக்டரிடம் புகார்
- தனியாா் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
- மாணவா்கள் விடுமுறை நாள்களில் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனா்.
திருப்பூர் :
திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜிடம், அனைத்து பொதுத் தொழிலாளா் நல அமைப்பு பொதுச்செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:- தமிழகத்தில் விடுமுறை நாள்களில் சிறப்பு வகுப்புகள் எடுக்க தடை விதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூா் மாவட்டத்தில் உள்ள பல்வேறு தனியாா் பள்ளிகளில் விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு கட்டாயமாக சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது.
இது தொடா்பாக மாவட்ட கல்வித் துறை அதிகாரிகளிடம் புகாா் தெரிவித்தால் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் தனியாா் பள்ளிகளுக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகின்றனா். தனியாா் பள்ளிகள் மாணவா்களின் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்கும் நோக்கத்தில் இத்தகைய செயல்களில் ஈடுபடுகின்றனா். இதனால் மாணவா்கள் விடுமுறை நாள்களில் சொந்த ஊா்களுக்குச் செல்ல முடியாமல் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனா்.
ஆகவே, நேரடியாக கள ஆய்வு செய்து விடுமுறை நாள்களில் மாணவா்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்தும் தனியாா் பள்ளிகளின் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.