search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள் (District)

    மங்கலத்தில் இறைச்சி கழிவுகளை மாற்று இடத்தில் கொட்டுவது குறித்து ஆலோசனை
    X

    ஆலோசனை நடத்திய போது எடுத்த படம்.

    மங்கலத்தில் இறைச்சி கழிவுகளை மாற்று இடத்தில் கொட்டுவது குறித்து ஆலோசனை

    • இறைச்சி கடை உரிமையாளர்கள் இறைச்சி கடைகளில் கண்ணாடி தடுப்பு வைக்க வேண்டும்.
    • இறைச்சி கழிவுகளை மாற்று இடத்தில் கொட்டுவது குறித்த ஆலோசனை கூட்டமானது மங்கலம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    மங்கலம்:

    திருப்பூர் மாவட்டம் மங்கலம் ஊராட்சி மங்கலம் நால்ரோடு பகுதியில் 50-க்கும் மேற்பட்ட மாடு, ஆடு, மீன், கோழி உள்ளிட்ட இறைச்சிக் கடைகள் உள்ளது. இறைச்சிகடை உரிமையாளர்கள் இறைச்சிக்கழிவுகளை மங்கலம் நால்ரோடு பகுதியில் இருந்து அவினாசி செல்லும் ரோட்டில் கொட்டிச்செல்கின்றனர். இந்த நிலையில் இறைச்சி கழிவுகளை மாற்று இடத்தில் கொட்டுவது குறித்த ஆலோசனை கூட்டமானது மங்கலம் சமுதாய கூடத்தில் நடைபெற்றது.

    இந்த கூட்டத்திற்கு மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி தலைமை தாங்கினார். இதில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், திருப்பூர் ஒன்றிய குழு உறுப்பினர் ஜானகிஎபிசியண்ட் மணி , மங்கலம் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் மற்றும் இறைச்சிகடை உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த கூட்டத்தில் மங்கலம் ஊராட்சி மன்றத்தலைவர் எஸ்.எம்.பி.மூர்த்தி பேசுகையில் ,

    " இறைச்சி கடை உரிமையாளர்கள் இறைச்சி கடைகளில் கண்ணாடி தடுப்பு வைக்க வேண்டும். இறைச்சி கழிவுகள் கொட்ட ஊராட்சியில் ஒதுக்கப்படும் இடத்தில் மட்டுமே கழிவுகள் கொட்டப்பட வேண்டும். அனைத்து இறைச்சி கடைகளுக்கும், தொழில் உரிம கட்டணங்களை வருகிற 28-ந்தேதிக்குள் செலுத்தப்பட வேண்டும். கழிவுகள் அகற்ற ஊராட்சியால் ஏற்படுத்தப்படும் வாகனத்திற்கான செலவினத்தை இறைச்சி கடை உரிமையாளர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

    Next Story
    ×