search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கலைப்போட்டியில் அசத்திய பள்ளி-கல்லூரி மாணவர்கள்
    X

     பேஷன் ஷோ போட்டிகள் நடைபெற்ற காட்சி.

    கலைப்போட்டியில் அசத்திய பள்ளி-கல்லூரி மாணவர்கள்

    • திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.
    • பெங்களூரு, கேரளாவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    திருப்பூர் :

    இக்னீஷியா என்கிற பெயரில் தேசிய அளவில் கல்லூரிகளுக்கு இடையிலான போட்டி திருப்பூர் முதலிபாளையம் நிப்ட்-டீ கல்லூரியில் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டுக்கான போட்டி தொடங்கியுள்ளது.

    இதனை அடல் இன்குபேஷன் மைய நிர்வாக செயல் அதிகாரி பெரியசாமி தொடங்கி வைத்தார். அப்பேரல் பேஷன் டிசைன் துறை தலைவர் அருந்ததிகோஷல் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலகிருஷ்ணன், வாழ்த்தி பேசினார். பெங்களூரு, கேரளாவை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட கல்லூரிகளை சேர்ந்த 700க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

    முதல் நாள் முக ஓவியம், சிகை அலங்காரம், காய், பழங்களில் அலங்காரம் செய்தல், படத்தொகுப்பு, ஓவியம், மின்னணு கழிவுகளில் புதிய கண்டுபிடிப்பு, கழிவு பொருட்களில் கலை பொருட்கள் தயாரிப்பு, மெஹந்தி, நகத்தில் ஓவியம் தீட்டுதல், விளம்பர படம், குறும்படம் தயாரிப்பு உட்பட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.2-ம் நாள் பேஷன் ஷோ, குழு நடனம், தனிநபர் நடன போட்டிகள் நடைபெற்றன.

    அனைத்து வகை இடைநிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் படைப்பாற்றலை வளர்க்கவும், பாரம்பரிய கலைகளை இளம் தலைமுறையினரிடம் உயிர்ப்புடன் வைத்திருக்கவும் கலை பண்பாட்டு திருவிழா போட்டிகள் நடத்தப்படுகின்றன.

    திருப்பூர் மாவட்ட அளவிலான போட்டிகள் அங்கேரிபாளையம் ரோடு, கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. வாய்ப்பாட்டிசை (செவ்வியல்), வாய்ப்பாட்டிசை, கருவி இசை (தாள வாத்தியம்), கருவி இசை (மெல்லிசை), நடனம் (செவ்வியல்), பாராம்பரிய நாட்டுப்புறக்கலை, காட்சிக்கலை (2டி), காட்சிக்கலை, மூன்று பரிமாணங்கள் (3டி), ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. மொத்தம், 430 பேர் பங்கேற்றனர். இறுதிநாளன்று நடனம் மற்றும் நாடகம் போட்டி நடந்தது.பாரம்பரியம் மற்றும் கிராமிய நடனத்தில் 120 பேரும், நாடகத்தில் 35 பேரும் பங்கேற்றனர்.

    Next Story
    ×