என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நுண்ணீர் பாசனம் அமைக்க விவசாயிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
- குறைந்த அளவு நீராதாரத்தைக் கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள சிறந்த தொழில் நுட்பமே நுண்ணீர் பாசன திட்டம்.
- நடப்பு ஆண்டில் அனைத்து விவசாயிகளும் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு நுண்ணீர்ப்பாசனம் அமைத்து சாகுபடி அதிகரிக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளே! குறைந்த அளவு நீராதாரத்தைக் கொண்டு அதிக பரப்பு சாகுபடி மேற்கொள்ள சிறந்த தொழில் நுட்பமே நுண்ணீர் பாசன திட்டம். நுண்ணீர் பாசனம் அமைக்க விரும்பும் விவசாயிகள் தங்களது விண்ணப்பங்களை விவசாயிகளே கணிப்பொறி மூலம் தோட்டக்கலைத் துறையின் https://tnhorticulture.tn.gov.in:8080/Home/Index என்ற இணைய தளத்தில் பதிவு செய்து முன்னுரிமை பெறலாம். தோட்டக்கலைப்பயிர்களான பழப்பயிர்கள், காய்கறிகள், மலர்ப்பயிர்கள், வாசனைதிரவிய பயிர்கள் மற்றும் தோட்டப்பயிர்கள் சாகுபடி செய்யும் சிறு குறு விவசாயிகளுக்கு (2 எக்டர் வரை விவசாய நிலமுள்ளவர்கள்)100 சதவீதம் மானியத்தில் எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1,35,855 வரையும், இதர விவசாயிகளுக்கு (2 எக்டருக்கு மேல் விவசாய நிலமுள்ளவர்கள்) 75 சதவீதம் மானியத்தில் எக்டருக்கு அதிகபட்சமாக ரூ.1,05,530 வரையும் நுண்ணீர்ப்பாசனம் அமைக்கும் பயிரின் இடைவெளியை பொறுத்து மானியம் பெறலாம்.
இத்திட்டத்திற்காக நடப்பு ஆண்டில் 2625 எக்டர் பரப்பில் சொட்டு நீர் பாசனம் அமைத்திட ரூ.20.71 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலும் உள்ள தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தங்களது நிலஆவணங்களான சிட்டா இ அடங்கல் , 3 புகைப்படம், நில வரைபடம், கிணறு அல்லது போர்வெல் உள்ளதற்கான சான்று, குடும்ப அட்டை மற்றும் ஆதார் கார்டு முதலியவற்றை எடுத்து வந்து நேரிலும் முன்பதிவு செய்யலாம். தங்களது விருப்பத்தின் அடிப்படையில் அரசினால அங்கீகரிக்கப்பட்டுள்ள நுண்ணீர்ப்பாசன நிறுவனங்களை விவசாயிகள் தேர்வு செய்யலாம்.
தேவைப்படின் விவசாயிகள் தாமாகவே பதிவு செய்யலாம் அல்லது நுண்ணீர்ப்பாசன நிறுவனம் மூலமாகவோ, வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்கள் மூலமாக பதிவு செய்து பயன்பெறலாம்.மேலும் நுண்ணீர் பாசனம் தொடர்பான அனைத்து விபரங்களுக்கும் 1800 425 4444 என்ற இலவச தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
எனவே நடப்பு ஆண்டில் அனைத்து விவசாயிகளும் தாங்கள் பயிரிடும் தோட்டக்கலைப்பயிர்களுக்கு நுண்ணீர்ப்பாசனம் அமைத்து சாகுபடி பரப்பினை அதிகரித்து அதிக வருவாயினை பெற்று பயனடையுமாறு கலெக்டர் கிறிஸ்துராஜ் தெரிவித்துள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்