search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குமரிக்கல் பகுதியில் தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு
    X

    கோப்புபடம்

    குமரிக்கல் பகுதியில் தொல்லியல் துறை அதிகாரி ஆய்வு

    • 2800 ஆண்டுகள் பழமையான உலகில் மிக உயரமான சுமார் 32 அடி உயரம் கொண்ட நடுக்கல்லை ஆய்வு செய்தனர்.
    • பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    பெருமாநல்லூர்:

    விருதுநகர் முதல் திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் அடுத்த குன்னத்தூர் அருகே உள்ள காவுத்தம்பாளையம் வரை அமைய உள்ள 765/ 400 கிலோ வாட் உயர் மின் கோபுர துணை மின் நிலைய திட்டத்தினால் ஏற்படும் ஆபத்திலிருந்து பொதுமக்களையும், விவசாயிகளையும் காப்பாற்ற கோரியும், இத்திட்டத்தை முழுவதுமாக ரத்து செய்யக் கோரியும் காவுத்தம்பாளையம் பகுதியில் பொதுமக்கள் மற்றும் விவசாய அமைப்புகள் சார்பாக தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.

    மேலும் அப்பகுதியில் உள்ள குமரிக்கல் பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என கோரிக்கை இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று திருப்பூர் மற்றும் ஈரோடு தொல்லியல் துறை ஆய்வு அதிகாரி காவியா காவுத்தம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட குமரிக்கல்பாளையத்தில் அமைந்துள்ள 2800 ஆண்டுகள் பழமையான உலகில் மிக உயரமான சுமார் 32 அடி உயரம் கொண்ட நடுக்கல் என்ற குமரி கல் மற்றும் அதனைச் சுற்றியுள்ள நிலத்தில் கிடந்த பானை ஓடுகள் ,முதுமக்கள் தாழி ,இரும்பு கசடுகள், தர்மசக்கரக்கல் என்னும் போர் நினைவுகள், ப்ரியல் சைட் எனப்படும் வட்டக் கல், கூடலூர் பத்ரகாளியம்மன் கோவிலில் உள்ள கல்வெட்டுகள் ,மீன் சின்னம் ,சுவாமி சிலைகளை ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது அவருடன் ஊத்துக்குளி தாசில்தார் தங்கவேல்,வருவாய் ஆய்வாளர் ரியானா மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் இருந்தனர்.மேலும் 9-ந் தேதி சாம்ராஜ் பாளையம் பிரிவு பகுதியில் கோரிக்கை மாநாடு நடத்த உள்ளனர்.

    Next Story
    ×