என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாடுகள்
கண்ணபுரம் மாட்டு சந்தையில் ரூ. 20 கோடிக்கு மாடுகள் விற்பனை
- 6,000 காங்கேயம் இன கால்நடைகளில், 4,000 கால்நடைகள் விற்கப்பட்டன.
- சந்தையில் நடப்பாண்டு 20 கோடி ரூபாய்க்குமாடுகள் விற்கப்பட்டது.
காங்கயம்:
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, ஓலப்பாளையம் அருகே கண்ணபுரத்தில் சித்திரை மாதத்தில் விக்ரம சோழீஸ்வரர் கோவில் சித்திரை பவுர்ணமி தேர்த்திருவிழா மற்றும் மாரியம்மன் கோவில் பொங்கல் விழா விமரிசையாக நடக்கும்.
இதையொட்டி காங்கேயம் இனமாடுகள் சந்தை நடப்பது வழக்கம். ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வரும் இந்த சந்தை நடப்பாண்டு கடந்த மாதம் 8-ந் தேதி துவங்கியது.கோவை, திருப்பூர், ஈரோடு, திண்டுக்கல், கரூர் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள்,பசுமாடுகள், கன்றுகள், எருதுகள் என காங்கேய இன கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வந்தனர்.
தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, தெலுங்கானா மாநிலங்களிலிருந்தும்விவசாயிகள், வியாபாரிகள் மாடுகளை வாங்க வந்தனர். அதே சமயம் தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் குடும்பத்துடன் வந்து சந்தையை ரசித்து சென்றனர்.
சந்தை நிறைவடைந்த நிலையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட 6,000 காங்கேயம் இன கால்நடைகளில், 4,000 கால்நடைகள் விற்கப்பட்டன. இதன் மதிப்பு ரூ.20 கோடி ரூபாய் இருக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.சந்தையில் நடப்பாண்டு 20 கோடி ரூபாய்க்குமாடுகள் விற்கப்பட்டது விவசாயிகள்,வியாபாரிகள் மத்தியில் மகிழ்ச்சி, நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.






