என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தாராபுரம்-காங்கயத்தில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப்பணியாளர்களுக்கு பரிசு
- காங்கயம் நகராட்சியில் சிறப்பான முறையில் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் வழங்கினாா்.
தாராபுரம்:
தாராபுரம் நகராட்சியில் சிறப்பான முறையில் பணியாற்றிய தூய்மைப்பணியாளா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
தூய்மை நகரத்திற்கான மக்கள் இயக்கம் - என் குப்பை எனது பொறுப்பு என்ற திட்டத்தின் அடிப்படையில், சுகாதாரத்தைப் பேணிக்காக்க மக்கும் குப்பை, மக்கா குப்பைகளை தரம் பிரித்துத் தர பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தி அந்தந்த பகுதியில் சிறப்பாக தூய்மை செய்ததற்காக தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நகா்மன்றத் தலைவா் கு.பாப்புகண்ணன் வழங்கினாா்.
தாராபுரம், தினசரி சந்தை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையா் வே.ராமா், நகா்மன்ற துணைத் தலைவா் ரவிசந்திரன், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வகுமாா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
இதேபோல காங்கயம் நகராட்சியில் சிறப்பான முறையில் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை நகா்மன்றத் தலைவா் சூரியபிரகாஷ் வழங்கினாா்.காங்கயம் நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், நகராட்சி சுகாதார ஆய்வாளா் செல்வராஜ், வருவாய் ஆய்வாளா் செல்வகுமாா் உள்படபலா் கலந்து கொண்டனா்.