என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மாணவர்களின் கோரிக்கையை ஏற்று பாடத்திட்டம் மாற்றும் முடிவை கைவிட்ட பாரதியார் பல்கலைக்கழகம்
- ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
- பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் கடும் எதிர்ப்பு எழுந்தது.
திருப்பூர் :
கோவை பாரதியார் பல்கலைக்கழகம் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளில் பி.காம்., முதலாமாண்டு மாணவர்களுக்கு எம்.எஸ்., ஆபிஸ் பாடம் இருந்தது. இப்பாடம் மாற்றப்பட்டு அதற்கு பதில் ஆர்ட்டிபீஷியல் இன்டலிஜென்ஸ் மற்றும் மெஷின் லாங்குவேஜ், பிக் டேட்டா உள்ளிட்ட பாடங்கள் சேர்க்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
தேர்வுக்கு 20 நாட்களே இருந்த நிலையில், பாடத்திட்டத்தை மாற்றுவது மாணவர்களின் தேர்ச்சியைப் பாதிக்கும் என்பதால் பல்கலைக்கழகத்தின் முடிவுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. இந்நிலையில் பாடத்திட்டத்தை மாற்றும் முடிவை பல்கலைக்கழக நிர்வாகம் கைவிட்டுள்ளது. முதல் செமஸ்டரில் புதிய பாடங்கள் பின்பற்றப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்த தகவல் பல்கலைக்கழகத்திற்குட்பட்ட கல்லூரிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) முருகவேல் கூறுகையில், பி.காம்., மாணவர்களுக்கான பாடத்திட்டம் மாற்றுவது நிறுத்தப்பட்டது. முதல் செமஸ்டர் தேர்வுகளுக்கு பழைய பாடத்திட்டமே பின்பற்றப்படும். இரண்டாவது செமஸ்டருக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்துவது குறித்து சிண்டிகேட் கூட்டத்தில் தீர்மானம் முன்மொழியப்படும். ஒப்புதல் கிடைத்தால் அமல்படுத்தப்படும் என்றார்.