என் மலர்
உள்ளூர் செய்திகள்

புதிய அறைகள் கட்டுவதற்கான பணிக்கு பூமி பூஜை நடைபெற்ற காட்சி.
இடுவாய் பாரதிபுரம் அரசு பள்ளியில் புதிய அறைகள் கட்டுவதற்கு பூமிபூஜை

- ரூ. 1கோடியே 4 லட்சம் மதிப்பில் 6 அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
- ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார்.
மங்கலம் :
திருப்பூர் ஒன்றியம் இடுவாய் ஊராட்சியில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கும், பாரதிபுரத்தில் உள்ள நடுநிலைப் பள்ளிக்கும் கூடுதல் வகுப்பறைகள் வேண்டுமென ஊராட்சி மன்ற தலைவர் கணேசன் திருப்பூர் மாவட்ட கலெக்டர் வினீத்தை நேரில் சந்தித்து மனு அளித்தார். இந்தநிலையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பள்ளிகல்வித் துறைக்கு வழங்கியுள்ள சிறப்பு நிதியிலிருந்து இடுவாயில் உள்ள ஆரம்பப் பள்ளிக்கு ரூ. 65,26,000 மதிப்பில்நான்கு அறைகளும், பாரதிபுரத்தில் உள்ள நடுநிலைப்பள்ளிக்கு ரூ. 1கோடியே 4 லட்சம் மதிப்பில் 6 அறைகள் கட்ட நிதி ஒதுக்கீடு செய்தார்.
இதையடுத்து பாரதிபுரம் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் புதிய அறைகள் கட்டுவதற்கான பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இடுவாய் ஊராட்சி தலைவர் கணேசன் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஊராட்சிஒன்றிய பொறியாளர் கற்பகம் , ஊராட்சி மன்ற துணைத் தலைவர் பரமசிவம் , பள்ளி தலைமை ஆசிரியர் காளீஸ்வரி சுப்பிரமணியம் , ஆண்டிபாளையம் தொடக்க வேளாண் கூட்டுறவு சங்க துணைத்தலைவர் சென்னியப்பன் ,ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் ஈஸ்வரி , கணேசன் , சுப்பிரமணி , ஒப்பந்ததாரர் தமிழ்செல்வன் மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர். புதிய பள்ளி அறைகள் கட்டுவது குறித்து அனைவரும் மகிழ்ச்சி தெரிவித்தனர். பள்ளிக்கல்வித்துறைக்கு கூடுதல்நிதி ஒதுக்கி தந்த தமிழக முதல்வர், மாவட்ட கலெக்டர்,தொடர் முயற்சி எடுத்த ஊராட்சி மன்ற தலைவர்,ஊராட்சி மன்ற நிர்வாகத்திற்கு ஆசிரியர்கள் சார்பிலும் பள்ளிமேலாண்மை குழு சார்பிலும் நன்றி தெரிவிக்கப்பட்டது.