என் மலர்
உள்ளூர் செய்திகள்
பல்லடம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- 2 பேர் படுகாயம்
- மோட்டார் சைக்கிளில் திரும்ப முயன்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது.
- தூக்கி வீசப்பட்ட இருவரும் அதிர்ஷ்டவசமாக கார் சக்கரங்களுக்கு அருகே விழுந்தனர்.
பல்லடம் :
பல்லடம் அருகே உள்ள பணிக்கம்பட்டி ஊராட்சி சின்னியகவுண்டம்பாளையத்தை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மனைவி பொன்மணி ( வயது 27). இவரது வீடு அருகே வசிப்பவர் சேகர் மகன் தேவேந்திரன்(28). இருவரும் பணிக்கம்பட்டி அடுத்து உள்ள க.அய்யம்பாளையம் பகுதியில் அட்டைப் பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலை செய்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீடு திரும்புவதற்காக தேவேந்திரன் மோட்டார்சைக்கிளில், பின்புறம் பொன்மணி அமர்ந்து கொள்ள இருவரும் சின்னியகவுண்டம்பாளையம் நோக்கி வந்தனர். பல்லடம்- செட்டிபாளையம் ரோட்டில், சின்னிய கவுண்டம்பாளையம் பிரிவு அருகே மோட்டார் சைக்கிளில் திரும்ப முயன்றபோது எதிரே வந்த கார் எதிர்பாராதவிதமாக அவர்கள் மீது மோதியது .இதில் தூக்கி வீசப்பட்ட இருவரும் அதிர்ஷ்டவசமாக கார் சக்கரங்களுக்கு அருகே விழுந்தனர். காயங்களுடன் தப்பிய அவர்களை அக்கம் பக்கம் உள்ளவர்கள் மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதல் உதவி பெற்று மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.மோட்டார் சைக்கிள் மீது கார் மோதும் கண்காணிப்பு கேமரா விபத்து காட்சிகள் பல்லடம் பகுதியில் வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகிறது.