search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருப்பூர் வழியாக சென்னை-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்
    X

    கோப்புபடம்.

    திருப்பூர் வழியாக சென்னை-திருவனந்தபுரம் இடையே சிறப்பு ரெயில்

    • அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் ஜூன் மாதம் 28-ந் தேதி வரை இயக்கப்படுகிறது.
    • சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூர் :

    கோடை கால விடுமுறையில் பயணிகளின் வசதிக்காக திருவனந்தபுரம்-சென்னை இடையே திருப்பூர் வழியாக சிறப்பு ரெயில் விடப்படுகிறது. அதன்படி திருவனந்தபுரத்தில் அடுத்த மாதம் 3-ந் தேதி முதல் ஜூன் மாதம் 28-ந் தேதி வரை இயக்கப்படுகிறது. இந்த ரெயில் வருகிற 3-ந் தேதி இரவு 7.40 மணிக்கு திருவனந்தபுரத்தில் புறப்பட்டு மறுநாள் மதியம் 12.45 மணிக்கு செல்கிறது. 9 நடைகள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் கோவைக்கு அதிகாலை 4.12 மணிக்கும், திருப்பூருக்கு 5.05 மணிக்கும், ஈரோட்டுக்கு 5.50 மணிக்கும், சேலத்துக்கு 6.55 மணிக்கும் சென்றடையும்.

    இதுபோல் சென்னை எழும்பூரில் இருந்து 4-ந் தேதி மதியம் 2.25 மணிக்கு புறப்பட்டு அடுத்த நாள் காலை 6.45 மணிக்கு திருவனந்தபுரம் சென்றடையும். ஜூன் மாதம் 29-ந்தேதி வரை 9 நடைகள் இயக்கப்படுகிறது. இந்த ரெயில் சேலத்துக்கு 7.22 மணிக்கும், ஈரோட்டுக்கு 8.20 மணிக்கும், திருப்பூருக்கு 9.15 மணிக்கும், கோவைக்கு 10.15 மணிக்கும் சென்றடையும். இந்த தகவலை சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×